Tuesday, April 30, 2013

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள்

 


அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.

பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம்.அந்தவகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து படியுங்கள்.

நீள்வட்ட முகம் உடையவர்கள்...

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர்ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் நீள்வட்ட முகமுடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்...

நீங்கள் சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்துகொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை கொடுத்துவிடும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்...


வட்ட முகமுடையவர்கள் அனைவரும் குண்டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்.

சகலரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்


http://www.sendflowerstohyderabad.com/images/fruit1.jpg
 
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
 
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
 
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
 
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
 
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
 
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
 
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
 
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
 
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
 
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
 
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
 
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
 
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!
 
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!
 
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
 
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
 
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
 
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
 
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
 
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
 
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
 
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
 
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
 
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
 
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
 
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
 
28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
 
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
 
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
 
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
 
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
 
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
 
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
 
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
 
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
 
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
 
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
 
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
 
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
 
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
 
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
 
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
 
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
 
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
 
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
 
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
 
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
 
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
 
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
 
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
 
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
 
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
 
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
 
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
 
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
 
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
 
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
 
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
 
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
 
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
 
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
 
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
 
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
 
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
 
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
 
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
 
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
 
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
 
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
 
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
 
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
 
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
 
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
 
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
 
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
 
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
 
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
 
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
 
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
 
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
 
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
 
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
 
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
 
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
 
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
 
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
 
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
 
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
 
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
 
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
 
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
 
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
 
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
 
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எல...ும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர்
:- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

Sunday, April 21, 2013

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

சில அறிவியல் கருவிகளை பற்றியும் அவற்றின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

அம்மீட்டர் (Ammeter):
 
மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது

அலிமோ மீட்டர் (Anemometer):
 
காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.

ஆடியோ மீட்டர் (Audiometer):
 
கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.

ஆல்டி மீட்டர் (Altimeter):
 
குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.

எலக்ட்ரோஸ்கோப் (Electroscope):
 
மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி

கம்யுடேட்டர் (Commutator):
 
மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.

கோலரிமீட்டர் (Calorimeter):
 
நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.

கலோரி மீட்டர் (Calorimeter):
 
வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி

கால்வனோமீட்டர் (Galvanometer):
 
மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.

கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer):
 
மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி

குரோனா மீட்டர் (Chronometer):
 
கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.

சாலினோ மீட்டர் (Salinometer):
 
உப்புக்கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன்மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)

செய்ஸ்மோ கிராஃப் (Seismograph):
 
நிலநடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி

குவாட்ரண்ட் (Quadrant):
 
பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்க ளையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.

டிரான்சிஸ்டர் (Transistor):
 
மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வு களின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.

டெலிபிரிண்டர் (Teleprinter):
 
தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.

டெலி மீட்டர் (Telemeter):
 
வான்பயணத்தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப்பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)

டெலஸ்கோப் (Telescope):
 
தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.

டைனமோ (Dynamo):
 
இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி

டைனமோ மீட்டர் (Dynamo meter):
 
மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.

தெர்மோ மீட்டர் (Thermometer):
 
வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி

தெர்மோஸ்கோப் (Thermoscope):
 
வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்ற ங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி

தெர்மோஸ்டாட் (Thermostat):
 
ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)

பாரோமீட்டர் (Barometer):
 
வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.

பிளான்டி மீட்டர் (Plantimeter):
 
சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி

பெரிஸ்கோப் (Periscope):
 
நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண் பவர் கண்மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.

பைக்னோ மீட்டர் (Phknometer):
 
நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion):  அளக்க உதவும் அடர்வளவி.

பைனாகுலர்கள் (Binoculars):
 
தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி

பைரோ மீட்டர் (Pyrometer):
 
உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.

மாக்னடோ மீட்டர் (Magneto Meter):
 
காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic Moments), புலங்க ளையும் (Fields) ஒப்பு நோக்க உதவும் காந்த அளவி

மானோ மீட்டர் (Manometer):
 
வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி

மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass):
 
முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி

மைக்ரோ மீட்டர் (Micrometer):
 
சிறுதொலைவுகள் மற்றும் கோணங்களைத்துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.

மைக்ரோஸ்கோப் (Microscope):
 
நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண் காட்டி

ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer):
 
ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.

ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer):
 
வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய உதவும் மின் தடை வெப்ப அளவி.

ரெயின்கேஜ் (Raingauge):
 
மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.

ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter):
 
வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண் ணளவி

லாக்டோ மீட்டர் (Lactometer);
 
பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது

வெர்னியர் (Vernier):
 
அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்த மாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.

வோல்ட் மீட்டர் (Voltmeter):
 
இருபுள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.

ஸ்டெதஸ்கோப் (Stethoscope):
 
இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.

ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter):
 
இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.

ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance):
 
பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.

ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer):
 
ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.

ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope):
 
மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.

ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer):
 
கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.

ஹைக்ரோ மீட்டர் (Hygrometer):
 
வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity) அளந்திட உதவும் கருவி

ஹைக்ரோஸ்கோப் (Hygroscope):
 
வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய உதவும் ஈரப்பதங்காட்டி

ஹைட்ரோஃபோன் (Hydrophone):
 
நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி
 
ஹைட்ரோமீட்டர் (Hydrometer):
 
நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது

கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


 விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ -உ – ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக் கொண்டே கணபதியின் உருவை நினை த்துப்பாருங்கள்.
 ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந் திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான், சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள் ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என் கிறார்கள். கணபதி என்ற பெய ருக்கு கண ங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மை யில் கணம் என்றால் காலத்தின் அளவுகோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக் கூற லாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் – தடைகளை ஏற்படுத்து பவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகி விடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.
ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம். கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக் கூடிய து அல்ல. அதை விவசாயம் செய்ய முடி யாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம் புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம் புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.
மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமை யான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற் று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக் னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட் டுகிறது!

பிள்ளையாருக்கு பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படை த்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்க ளை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இரு க்கக்கூடாது.

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய 7 பருவங்கள் (தமிழில் . . .)


ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய சப்த பருவங்கள் உண்டு. இந்த 7 பருவங்களுக்கும் நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் இனிமையான பெயர்கள் உண்டு. அந்த பெயர்களை வயதிற்கேற்ப கீழே காணலாம்.

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது  வரையிலான பருவம் பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது  முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் -  காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் -  முதுமகன்

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
*  9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்


எட்டு வகையான லட்சுமிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் பதினாறு (16) வகை லட்சுமிகள் உண்டு. அந்த பதினாறு (16) வகையான லட்சுமிகளின் பெயர்களும், அவர்களின் சிறப்புக்களும்!

1. ஸ்ரீ தனலட்சுமி:-

நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்கவேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி:-

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண் டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப்பெறலாம்.

3. ஸ்ரீ தான்யலட்சுமி:-

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீ வரலட்சுமி:-

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ் வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீ சவுபாக்யலட்சுமி:-

ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கவேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீ சந்தானலட்சுமி:-

எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி:-

எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீ மகாலட்சுமி:-

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவவேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி:-

எந்த வேலையும் என்னால் முடியாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி:-

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி:-

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:-

எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி:- 

பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறு மையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீ கிருத்திலட்சுமி:-

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப் படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி:-

விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:-

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்துவிடாமல் இருக்க ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண் டும்.

Wednesday, April 17, 2013

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
       மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
 கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப் போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 

  பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள்தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!.  இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானியங்கள் 
அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். 
 

அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பா ற்றப்படுவார்கள்!!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலா புறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக் கொண்டு நிற் கிறது!!! இது ஒரு தோராயமான கணக்குதான், இதை  உயரமான கோபுர ங்கள், இதைவிட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!அதெப்படி என்றுகேட்கிறவர்கள் படத்தைப்பார்க்கவும். இதை எல் லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.


Monday, April 15, 2013

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்
அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா!

அஷ்டலஷ்மிகளின் பெயர்கள்

கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி,  விஜயலட்சுமி, வீரலட்சுமி, மஹாலட்சுமி

அஷ்ட லஷ்மிகளின் சிறப்புக்கள்
  
1. கஜலட்சுமி:-
.
  நான்கு கரங்களுடனும், அதில் இருகைகள் தாமரை மலரை ஏந்த,  
ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பல வகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜ லட்சுமியின் திரு அம்சமாகும்.
.
2. ஆதிலட்சுமி:-
.
 

 ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபயகரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப் பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச்சுற்றிலும் அழகு வெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூல முதலான ஆதிலட்சுமியே ஆவாள்.
.
 
3. சந்தானலட்சுமி:-
.
  எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்ன லாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபயகரத் துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தானலட்சுமியின் திரு அம்சமாகும்.
.
 
4. தனலட்சுமி:-
.
 
 மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.
.
 
5. தானியலட்சுமி:-
.
 


 எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந் தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவைகளை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை , அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண் டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.
.
 
6. விஜயலட்சுமி:-
.
  உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளு ம், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண் டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜய லட்சுமியின் இயல்பு ஆகும்.
.
 
7. வீரலட்சுமி:-
.
 


 எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில்  ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வண ங்கி பேரருள் பெறுவோம்.
.
 
8. மஹாலட்சுமி:-
.
 
 தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல்நோக்கிய இருகரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம்

 
சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், சோமவார விரதம்!
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான் . அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்த வரை தானம் செய்ய வேண்டும். அதன்பின் பகல் முழுவதும் உண் ணாமல் விரதம் இருந்துமுன் இரவில் ஒருவேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டு ம். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதி யர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்ன தானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னி டத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார். கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 
ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப் படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகாவிஷ்ணுவை விட்டு, லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்ப வர்களுக்கு மறுபிறவி இல்லை. கார் த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். ஆலயத்தில் சுவாமிக்கு முன் பூஜைநேரத்தில் ஷாடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.
 
 
 
 
கார்த்திகைப்பொரி மிகவும் வெண்மை யாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். வெண் பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல்பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர் த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன் றுவான் என்பது தத்துவம்.
 
 
 
 
 
 எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றால நாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவ தும் உத்தமம். நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி அவனது பொற்பாதத்தில் சரணடை வோம்.