Wednesday, October 31, 2012

யமபுரியும், யமதர்மராஜனும் (கருட புராணம்)

சூதமா முனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்:


பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக  யமபுரிக்குச் செல்வான்.. அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும் .
எனவே இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும். இத்தகைய  தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள். தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்! என்று விண்ணபஞ் செய்வான்.

                கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த மவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான். யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், "பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்" தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே  தோன்றுவானாயின், 'இந்த ஜீவனுக்குரிய மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான்  வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து  சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள். பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள்.
                                 
அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான். அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான். அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
                                          
செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும். மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச்  சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்! என்று திருமால் ஓதியருளினார்.

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும் (கருட புராணம்)

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின்சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார். முனிவர்களே! திருமால் கருடனை நோக்கி கூறலானார்.

கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான். ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால்  பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும். புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள். பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.
                         
   பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை


28 கொடிய நரகங்கள்.

பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.

2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும்,  பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.

10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.

12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.

17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி  விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.

21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.

27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.

28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.

இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.
இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
                                                              வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக்  கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார்.

பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள் (கருட புராணம்)

பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன் என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.
                                                 புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள். எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவிலை. பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து , அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
                   
                      அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும்  மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்தது, யமதர்மனைப் பார்த்து தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும்  ரகைஷயும்  செய்வாயாக! என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தல். கலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

           பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச்  செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள்.  மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும். வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள். பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

       கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார்.

சீவன் செல்லும் பாதையில் பரதவித்தல் (கருட புராணம்)

சூதபுராணிகர்  நைமிசாரணியவாசிகளை நோக்கி, திருமாலின் திருவடி மறவாத பக்தர்களே என்று கூறலானார்.
கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறியதாவது:

யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் சீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்ப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே ? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே! என்று அலறித் துடிப்பான்.
கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும் புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச்  சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
                                           அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு "அவ்யாமியம்" என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு  யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். பிறகு "குருரபுரம்" என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு அப்பால் நடந்து "கிரௌஞ்சம்" என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான். அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து,
ஜீவனே!  எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய  வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும் என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.
                                                            பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன்  மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில  பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த சீவனைப் பார்த்து, அட மூடனே!   நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.
                                     பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட சீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும்.  ஐயகோ!    பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே!
பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா!  சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா!  "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்! என்று துக்கப்படுவான்.
                    
                         அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே!   பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது. அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேக்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு  எதையுமே செய்ய இயலாது. மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

                           கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான். இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவபதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து "துக்கதம்" ஊரை அடைந்து உண்பான். விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில் யமகிங்கர்களே!   என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்  என்று அழுவான்.
                    
                                           அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி  முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும் என்று அறைவார்கள். ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன் என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான். யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும்  ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு நிறவனர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.

யம லோகத்திற்கு போகும் வழி (கருட புராணம்)





ஸ்ரீ வேத வியாச முனிவரின் மாணவரான, சூதபுராணிகர் நைமிகாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி, அருந்தவ முனிவர்களே கருடாழ்வான். திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும் என்று கேட்கவும் கருணைக் கடலான கார்மேக வண்ணன், கருடனை நோக்கிக் கூறலானார்.
                   
       கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது.
                   
அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன தூதர்களிடம் கூறுவான். விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ சீவர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள். அவர் அத்தூதர்களை நோக்கி, ஏ கிங்கரர்களே! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவான். உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, அந்தோ! ஐயையோ! என்று ஓலமிட்டு அழும். தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. சீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
                     
அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ஆ..ஆ... என்று கதறி பதறி நிற்பான். பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாகத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான். பிண்ட சரீரம் பெற்ற சீவனன், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட சீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
                                                          
வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ஆ, ஆ, ஊ, ஊ என்று ஓலமிடுவார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன். ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்! என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.

எள் , தருப்பை முதலியன பற்றி (கருட புராணம்)

கருடன், திருமாலைப் பணித்து, சர்வேசா! தாங்கள் இதுவரை கூறிய விசயங்களை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கருமங்களைச் செய்யும் போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தை கொமயத்தால் ஏன் மெழுக வேண்டும். பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எண்ணெய்யும், தர்ப்பைப் புற்களையும் உபயோகைப்பதேன்?கட்டிலில் படுதுரங்கியபடியே இறந்தவர்கள் நற்க்கதியடைய மாட்டார்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களை யெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். உடனே புருஷோத்தமன் கருடனை நோக்கிக் கூறலானார்:

வைனதேயா! நல்ல கேள்வி! சொல்கிறேன். நீயும் கவனமாக கேட்ப்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பமில்லை. தர்மமும் தவமும் செய்யவில்லை என்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும். கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது. நன்மைகனைப் பெற்றவனே எல்லா உலகங்களிலும் நன்மையை அடிவான்.

கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே ஒரு குறிப்பிட்ட ஸ்த்தலத்தில் திருவலக்கால் துடைத்து சுத்தம் செய்து, கோமியத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் செய்தால், அரக்கரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும், அங்கு செய்யவிடாமல் அக்கர்மங்களை முற்றுப்பெறாதவாரும் தடுத்து நிறுத்தி விடும். சுத்தம் செய்த ஸ்த்தலத்தில் கருமம் செய்தால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். தூய்மை செய்யாதிடத்தில் கர்மம் செய்தால் பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.
      
           எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இருவகைப்படும். கருப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புள், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று. அந்தத் தருப்பையின் இருகடையிலும் பிரமனும் சிவனும் அதன் நடுவே ஸ்ரீ ஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் எதுவும் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்க்கும் தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாயக்கும்  (துளசி)  நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.
               
         ஏகாதசி விரதமும், திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும், பசுவும் பிராமண சக்தியும், ஸ்ரீ ஹரியின் சரனுமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தை கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்த்தலத்தில் சூசைப் புல்லை பரப்பி அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புள்ளனையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் துளசியையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயார புகன்ற வண்ணம் மடிவாநாகில், அயனரனாதியருக்கும் அரிதாகிய நிரதிசிய இன்பவீடாகிய நமது உலகத்தை வந்தடைவான். மாய்ப்பவன் தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுத்தலாகாது. முதுகு கீழறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதி தாங்களைஎல்லாம் கொடுத்து விட வேண்டும். அவற்றில் உப்பை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்க்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்கலோகத்தை அடைவான் என்றார் திருமால்.

பிரேத ஜென்மமடையக் காரணங்கள்: (கருட புராணம் )



கருட பகவான் திருமகள் தலைவனைத் திருவடி தொழுது ஒ அனந்த கல்யாண குணநிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜென்மத்தை அடைவான், அடைந்தவன் என்ன பொருளை உண்பான்? எங்கே வசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும் என்று கேட்கவும் பரமபத நாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்:


புள்ளரசே! பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில்  கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து, அவனது குலத்தில் பிறந்த ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டவனும், மரித்தவுடன் பிரேத ஜென்மத்தை அடைவான்.
                                                                        

                                                        
  பிறருக்கு உரிமையான பூமியை அபகரித்தவனும், எல்லைகளை புரட்டித் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், தற்கொலை செய்து இறந்தவனும், மிருகங்களால் தாக்கியிறந்தவனும், சம்ஸ்காரம் செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இறந்தவனும், தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாமல் இறந்தவனும், விருஷோர்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவான். கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டிருக்கும் போதோ செத்தவனும், தெய்வத்திரு நாமங்களை உச்சரிக்காமல் உயிர் விட்டவனும், ரஜஸ்வாலையான பெண் சண்டாளன் முதலியோரை தீண்டிவிட்டு ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும், ரஜஸ்வாலையாய் இருக்கும் போது அவ்வீட்டில் இறந்தவனும், தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனு நூலுக்கு விரோதமாக தீர்ப்பு  வழங்குவோனும், தீர்மானம் செய்பவனும், அந்தணரையும் பசுக்களையும் கொல்பவனும் ஹிம்சிப்பவனும், கல், மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும் வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றை களவாடுவோனும், பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.
                        

  பிரேத ஜென்மம் அடைந்தோர் அனைவரும் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள் என்றார் திருமால்.

ஈமக்கிரியைகள் (கருட புராணம் )


கருடன் முராரியை நோக்கி சர்வேசா! தாயைப் பெற்றவளும், அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் பொது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால், அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டம் சேர்க்க வேண்டும்? என்பதை அடியேனுக்குக் கூற வேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பகவான் கூறலானார்.
          
       வைனதேயா!   தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும். பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான். சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சிலகருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.
                        
 கருடா!    ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.

Saturday, October 27, 2012

மூல நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் நீங்க ….



27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள். பொதுவாக, மூல நட்சத்திரம் உள்ளவர்களால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவ்வளவு சிறப்பு ஏற்படாது.

மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். மூல நட்சத்திரக்காரர்கள் காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம் வரலாம்.

மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்குக் கஷ்டம் வரும். இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.
பரிகாரங்கள் விவரம் வருமாறு:-

1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி.

2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி.

3. பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒருகைப்பிடி.

4. புற்று மண் ஒரு கைப்பிடி.

5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒருகைப்பிடி.

6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி.

7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி.

மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.

திருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?



திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது?

என்ன என்ன செய்ய வேண்டும்:-

* முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.

* வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.

* சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறுமருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.

* ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.

* புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.

* கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளரக் காரணமாகிவிடும்.

* புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.

* அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.

* பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.

* ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

* புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.

* விட்டுக்கொடுக்கும் மனதுயாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.

Thursday, October 25, 2012

கண் மை





நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.
 இதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
 கண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்



திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

பத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.

தல வரலாறு


வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், "உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு' எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, ""பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், "இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் "உண்ணிக் கண்ணனாக' இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
கோவில் முன்புள்ள சாலை
சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து "குஞ்சு தம்பிகளை" போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 10008 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது குறிப்பிடத்தக்கது.

இதிஹாச புராணம்

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஹிந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.
வேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.
அதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.

கோயில் சிறப்பம்சம்

மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.
பத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவினதாக இருக்கின்றது.
இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது. திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றும் ஸ்ரீ பத்மநாபர் போற்றப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில், அதாவது மகாவிஷ்ணுவுன் மிகவும் புனிதமான கோவில்களில், விஷ்ணுவின் விக்ரகம் மூன்று நிலைகளில் பொதுவாக ஒரு நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ அல்லது சயனித்துக் கொண்டோ இருப்பதாகக் காணலாம். ஆனால் குறிப்பாக பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் ஈசன் மூன்று நிலைகளிலும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். கர்பக் கிரகத்தில் இருக்கும் மூலவரை மூன்று வாதில்களில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சயனித்துக் கொண்டும், நடு வாயில் வழியாகப் பார்க்கும் பொழுது ஈசன் நின்று கொண்டும், மேலும் உற்சவங்களின் பொழுது திரு வீதி உலாவில் பல்லக்கில் கொண்டு செல்லும் உற்சவ மூர்த்தி அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்.
அண்மையில் வெளியான ஒரு உண்மை என்ன என்றால், இறைவன் பத்மனாபரின் விக்ரகம் முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இஸ்லாமியர்கள் கோவிலுக்குப் படையெடுத்து அழிப்பதை தவிர்ப்பதற்காகவே காட்டு சர்க்கரை யோகம் என்ற வெளிப்பூச்சு விக்ரகத்தின் மீது பூசியதாக தெரிய வருகிறது. இறைவனின் கிரீடம் மற்றும் குண்டலங்கள், மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனதே. ஈசனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத்தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர் ஆகிய யாவும் தங்கத்தால் ஆனதே. இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும். இறைவனின் திருவடிகளும், தங்கத்தால் ஆனதே.
காட்டு சர்க்கரை யோகம் என்பது மிகவும் கூர் அறிவுடன் செய்யப்பெற்ற மிகவும் அழகான திட்டமாகும், அதன் மூலம் கோவிலை சூறையாட வந்த கூட்டத்தினரின் திசையை திரும்ப வைக்க மேற்கொண்ட திறம் படும் யுக்தியாகும்.

கோவில் கோபுரம்

இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் (அதாவது தாமரைகள் அடங்கிய குளம்) அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும், இங்கே காணப்பெறும் ௩௬௫ மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப் பெற்றதாகும், இவற்றை காணக் கண் கோடி வேண்டும் என்பதே நிஜமாகும். கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோவில் வாசலில் துடங்கி கோவிலின் கர்பக்கிரஹம் வரைக்கும் இந்த தாழ்வாரம் நீண்டதாக காணப்படுகிறது. தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழ்த்தளம் (கிழக்கு வசமுள்ள முதன்மை வாசல்) நாடக சாலை என அறியப்படுகிறது, இங்கே வருடந்தோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கர்பக்கிரகம்

கோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம். இந்த சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 10008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தெரிவு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சாலிக்கிராமத்தின் மீது, "காட்டு சர்க்கரை யோகம்" என வழங்கும் ஒரு சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி, கொண்டு வரப்பட்டது. இந்தக் காட்டு சர்க்கரை விக்ரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் ஆண்ட விடாமல் தடுக்கும். இறைவனுக்கு செய்துவரும் அபிசேகமானது பரம்பரை வழி வந்த வழிபாடு அல்ல. தினமும் மலர்களால் இறைவன் அர்ச்சிக்கப் படுகிறார் ஆனால் அபிஷேகத்திற்கு சிறப்பான வேறுபட்ட விக்ரகங்கள் பயன் படுத்தப் படுகின்றன. மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.
கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை "ஒற்றைக்கல் மண்டபம்" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் "ஒற்றைக்கல் மண்டபத்தின்" மீது ஏறவேண்டும். இறைவனை மூன்று வாதில்களில் இருந்து சேவிக்கலாம், - முதல் வாதில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் நாம் காணலாம், இரண்டாவது வாதில் வழியாக நாம் இறைவனின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்ம தேவனையும், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அன்னைமார்களையும், மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும், இதர விக்ரகங்களையும் நாம் காணலாம், மேலும் மூன்றாவது வாதில் வழியாக இறைவனின் திருவடிகளை மனமுவந்து சேவிக்கலாம். இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட "பத்மநாப தாசராக", அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். மதப்பற்று கொண்டுள்ள அனைவரும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆட்சி புரிவது மகா விஷ்ணுவே ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பிற தெய்வங்கள்

இந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.

ஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்

அனந்த சயனத்தில் காணப்படும் இறைவனின் விக்ரகம் 12008 சாலிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சாலிக்ராமங்கள் தனிப்பட்டவையாகும், ஏன் என்றால் அவை நேபாள நாட்டை சார்ந்ததாகும் மேலும் புனிதமான கந்தகி நதிக்கரையில் இருந்து பெற்றவையாகும், மேலும் ஆடை அலங்காரம் மற்றும் மேள தாளத்துடன் அவற்றை யானைகளில் மேல் வைத்து வழிபட்டுக்கொண்டே இங்கு எடுத்து வரப்பட்டதாகும். இறைவனின் சிலை வடிவத்தின் மீது, அதற்குப் பின்னர், "காடுசர்க்கரை யோகம்", நவரத்தினங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆயுர்வேதக் கலவை ஆகியவற்றைக் கொண்டு மேல் பூச்சு பூசியதாகும். இறைவன் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் இன்றும் இறைவனே நேராக பல முறைகள் எழுந்தருளி திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாக அடித்துக் கூறுகின்றனர்.

நைவேத்யம்

பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யம் பொதுவாக அரிசியால் ஆன பிரசாதம் இங்கு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், அடியார்களின் விருப்பத்திற்கு இணங்க, இதர பிரசாதங்களையும் இறைவனுக்கு படைத்து பிரசாதமாகப் பெறலாம்.
அவற்றில் இரத்தின பாயாசம் என்பது இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயாச வகைகள்.
மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், நெய்யால் சுவையூட்டியது.
ஒற்றை துலா பாயாசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயாசம், மற்றும் பால் பாயாசம் போன்றவை அனைத்தும் மிகவும் பிரபலமாகும்.
வியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு சிறப்பான பானக நைவேத்தியம் வழங்கப்பெறும்.
இறைவனுக்கு உண்ணி அப்பம், மோதகம், வேல்லத்துடன்கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.
வில்வமங்கலத்து திவாகர அசார்யார் என்ற ஒரு பெரிய முனிவர் ஒரு பழுக்காத மாங்காயை இறைவருக்கு இதே சிரட்டையில் படைத்தார் மேலும் அதே சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.

நம்மாழ்வார் மங்களாசாசனம்

இக்கோயிலில் நம்மாழ்வாரின் பாடல்கள் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே

ராஜாவின் தானப் பட்டயம்

1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.

திருவிழாக்கள்

ஆராட்டு முடிந்து திரும்பும் நரசிம்மரும், பத்மனாபசுவாமியும்
ஆராட்டு முடிந்து திரும்பும் கிருஷ்ணர்
லட்சதீப விழா அன்று கோவில் கோபுரம் 
பங்குனி திருவிழாவின் போது வைக்கபடும் பாண்டவர்களின் சிலை
இந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெறும்.

தரிசனம்

தரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.

கோவில் விதிமுறைகள்

பக்தர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும்.
ஆண் மக்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.
இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது.
இதன் பொருளானது ஆண் மக்கள் கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சூரிதாரை அணியக்கூடாது.
லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்)அறையில் இருந்து தோதிகளை வாடகைக்குப் பெறலாம் அதற்கான கட்டணம் ரூபாய் 15.
கால்சட்டைகள் அல்லது சூரிதார் மேல் ததியை அணியலாம்.
கோவிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் காமராக்கள் கொண்டு செல்லக்கூடாது.
தொலைபேசிகளை கோவில் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம், அதற்கான கட்டணம் ஒரு தொலைபேசிக்கு ரூபாய் பதினைந்து ஆகும்.
கைப்பைகளை கோவிலின் உள்ளே கொண்டு செல்லலாம்.

பாதாள அறை

இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது [1] ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

Monday, October 22, 2012

ஆண், பெண் இருவரினதும் அங்கங்களை வைத்து குணங்களைக் பற்றிக் கூறும் சாமுத்ரிகா லட்சணம்


சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வைத்து அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இது பண்டை காலந்தொட்டு இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறையாகும். இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் அதிகமாக காணலாம். எல்லாப் பெண்களுக்கும் இவ் லட்சணங்கள் எல்லாம் அமைவதில்லை. அப்படி அமைந்துவிட்டால் இறைவிக்கு நிகரான வாழ்கை அமையும். பொதுவாக பெண் பார்க்கச் செல்லும் பெரியோர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்ப்பத்திலும், இளையோர் அழகை பார்ப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.
சைவ சமயத்தவர்களினால் வணங்கப்பெறும் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியதாக அமைக்கப்பெறுகின்றது. அதனால் போலும் மாகாலட்சுமி மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறா என சில பெண்களை பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். பெண்களின் எவ் உறுப்பு எப்படி அமைந்தால் நன்மை பயற்கும் என்பதனை கீழே விளக்கப்பெற்றுள்ளன

பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்:

இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உருண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மையாக இருந்தால் எப்படி தட்டையாக இருந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம் நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.

காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடித்து உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது நல்லது.
இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.

கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும் அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும் இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது விரல் கட்டைவிரலை விட நீளமாக இருந்தால் கண்வனை மதிக்கமாட்டாள் என்றும் தன் மனம் போன போக்கில் நடந்து கொள்வாள் என்றும் கூறப்படுகின்றது.

பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதை அனுபவ ரீதியாகவும் பார் த்துள்ளோம்.
கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லியிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இரு ந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

கண் புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல்லது என்று சொல்கிறது.
மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.

கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்களிடம் கலை உணர்வு இருக்கும்.
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக
தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.
ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்தி சாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப் பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.குடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள்தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மா திரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

கண்களை எடுத்துக் கொண்டால் உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல…
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாத வர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக் கங்களை சந்திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பை விட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இரு ப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்கவேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

முன் பற்கள் இரண்டிற்கும் இடையே இடைவெளி உள்ள பற்களைக் கொண்டவர்கள் காம உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.
அடுத்ததாக முடியை எடுத்துக் கொண்டால் கோரமுடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப் படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலைமுடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. சித்தர்கள் எப்போதும் சங்கேத பாஷையில் பேசக்கூடியவர்கள். எனவே சேலை கட்டிய என்பது சேலையைக் குறிப்பது அல்ல. சேலை என்பது மீனைக் குறிக்கும் சொல். மீனைப் போன்ற கண்கள் கொண்ட பெண்களை (அதாவது பரந்து விரிந்த) நம்பினால் என்பதுதான் அந்த பாடலின் பொருள்.

மேலும் உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாமா?

ஒருவரது ஜாதகத்தை அது அவருடையதுதானா என்பதை தோற்றத்தை வைத்துப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

ஆண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந் தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித் திரம்.

2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.

4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் – அழகான, சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந் து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.

7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷ்டமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாக வோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கறுப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கறுத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்க ளை உடையவர்கள் கல்வி மான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதி கம் வரும். வரி சை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..

11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல்செவி உள்ளே மடங் கியிருப்பின் கபடதாரி.

12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம் புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலி ருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும்போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்பஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சம மான உயர த்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.

15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

16. வயிறு – பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.

18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப் பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

Sunday, October 21, 2012

அரவான்


சிங்கப்பூர், மாரியம்மன் கோவிலில் வணங்கப்படும் அரவான். பாம்பு வடிவில் உள்ள தலைமறைப்பு அரவானின் தலைக்குப் பாதுகாப்பாக உள்ளது.
அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். இவர் இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் (மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர்) மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.
மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.
தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.



பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள்

மோனியர் வில்லியம்சின் சமற்கிருதம்-ஆங்கிலம் அகராதி (1899), இரவன் என்ற பெயர் இராவத் (इरावत्, Irāvat) என்ற வேர்ச்சொல்லிருந்து உருவானது என்று குறிப்பிடுகிறது. இராவத் என்ற சொல், இடா (इडा) என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள இரா (इरा) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இரா என்ற வார்த்தைக்கு "உணவைக் கொண்டிருத்தல்", "அதிகப்படியான பொருள்களைக் கொண்டிருத்தல்", அல்லது "வசதியாக இருத்தல்" (மகாபாரதம், ரிக் மற்றும் அதர்வ வேத சாத்திரங்களில் பயன்பாடு) என்று பொருள் கொள்ளப்படுகிறது.ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சமயத் துறை[5] பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டிபைட்டெல் (Alf Hiltebeitel) இரவன் அல்லது இரவந்த் என்ற சமசுகிருதப் பெயர் இடாவந்த் (இடா வைக் கொண்டிருக்கும் ஒருவன்) என்பதிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். இடா என்ற வார்த்தை, சமய ரீதியாக ஒரு தியாகத்தின் அனைத்து ஆக்கத்தன்மை நிறைந்த நன்மைகளும் (உண்பவர்களுக்குக்) கிடைக்கச் செய்யும் ஓர் உண்ணக்கூடிய பொருளைக் குறிக்கிறது என பிரெஞ்சு இந்தியவியலாளர் மடிலைன் பியார்டூ (Madeleine Biardeau) விளக்குகிறார். இந்த வரையறையின் அடிப்படையில், இரவன் என்றால் மகாபாரதத்தில் தியாகத்திற்குப் பலியாகும் ஒருவர் என்று பொருளென பியர்டூ கருதுகிறார். வேறு இடங்களில் தேவர்களும் அசுரர்களும் அடையப் போட்டியிடும் ஒரு பொருளாகவும் இடா குறிப்பிடப்படுகிறது.
இரவன் எனும் பெயர் அரவன் என்று பொதுவாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் என்று வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுகிறார், அவை: கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் (அரவானுக்கு மட்டுமானது) திரௌபதி (அரவானின் மாற்றாந்தாய்-அருச்சுனனின் மனைவி) வழிபாட்டு மரபும். கூத்தாண்டவர் மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று அறியப்படுகிறார். கூத்தசுரன் என்ற அரக்கனைக் கூத்தாண்டவர் கொலை செய்வதாகக் கூறும் புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது.
தமிழ்ப் பெயரான அரவான் அரவு (பாம்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.

உருவ விளக்கம்

அரவான் வெட்டுண்ட தலையின் உருவமாகவே எப்போதும் கோவில்களில் வணங்கப்படுகிறார். வழக்கமாக மீசை, பெரிய கண்கள் மற்றும் காதுகள் ஆகியவற்றுடன் அரவான் சித்தரிக்கப்படுகிறார்; ஒரு கூம்பு வடிவ மகுடம், நெற்றியில் வைணவ நாமம் மற்றும் காதணிகளை அணிந்து காட்சியளிக்கிறார். மகுடத்தின் மீது நாகப்பாம்பு படமெடுப்பது போன்றோ, அல்லது அதிலிருந்து நாகப்பாம்பின் தலைகள் வருவது போன்றோ அல்லது அதன் பின்புறத்திலிருந்து ஒரு நாகப்பாம்பு வருவது போன்றோ அரவானின் உருவம் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது. கூவாகத்தில் இருக்கும் அரவான் சிலையின் மகுடத்திலும் பாம்பு உருவம் இடம்பெற்றுள்ளது.
பேய்களைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் கோரைப் பற்கள் இருப்பது அரவான் உருவத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். கூவாகத்தில் உள்ள அரவானின் உருவத்தில் இது போன்ற கோரைப் பற்கள் இல்லை எனினும், அரவானின் பேய் குணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் திரௌபதி வழிபாட்டு மரபில் அவரது சிலைகளில் இந்த கோரைப் பற்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
அரவான் தலை சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஏற்றவாறு எளிதாகவும், வண்ணம் தீட்டப்பட்டோ அல்லது தீட்டப்படாமலோ இருக்கும். இச்சிலைகள் அரவான் கோவில்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும். கூவாகம், கொத்தடை, கொத்தட்டை மற்றும் பிள்ளையார்க்குப்பம் போன்ற இடங்களிலுள்ள அரவான் உருவங்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட முகத்துடன் பலவண்ண ஆபணரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. கொத்தட்டை, மதுக்கரை மற்றும் பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் வண்ணம் தீட்டப்படாத கருப்பு நிற கல் சிற்பங்களைக் காணலாம்.
அரவானது தியாகத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களும் உள்ளன. இக்காட்சிகளில் பெரும்பாலும், அரவானின் தலை வெட்டப்படும் நேரத்தில் அவர் காளி தெய்வத்தினை வணங்கி நிற்பதைப் போன்று இருக்கும். தன் தலையைத் தானே வெட்டிக் கொண்ட அரவான், ஒரு கையில் வாளுடன் மற்றொரு கையில் வெட்டுண்ட தலையை ஏந்தி காளிக்கு அளிப்பது போன்ற ஓவியங்களும் உள்ளன. (இத்தகைய ஓவியமொன்று சென்னை, சௌக்கார்பேட்டையில் உள்ளது).

இலக்கியத்தில் அரவான்

மகாபாரத காப்பியத்தில், அதன் முக்கியக் கதாநாயகனான அருச்சுனரின் மகனாக ஒரு சிறிய கதாப்பாத்திரமாக அரவான் தோன்றுகிறார். மகாபாரதத்தின் பின்புலத்திலிருந்து, அதன் காலம் முந்தைய வேத காலத்திற்கு பிறகும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் முதல் பேரரசு உருவானதற்கு முன்பும் அமைந்த காலம் என அறியப்படுகிறது. எனவே அதன் காலம் கிமு எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். சிறிதும் மாறாமலிருந்த வேதங்களைப் போலன்றி, பிரபலமான மகாபாரதம் மொழியிலும் நடையிலும், கதை சொல்பவர்களால் மாற்றப்பட்டிருக்கவேண்டுமெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய மாறும் தன்மையுடைய காப்பியத்தின் மிகப் பழமையான பகுதிகள் இதைப் பற்றிய புற மேற்கோள்களை விடப் பழமையானதல்ல என நம்பப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினியின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும். குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) மகாபாரதம் இறுதி வடிவம் அடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தின் முதல் இலக்கியத் திறனாய்வின் ஆசிரியர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: ”மாறும் தன்மையுடைய நூலின் அசல் வடிவத்தை அதன் உண்மையான வகை மற்றும் கருத்தியல் கிளையமைப்பு (stemma codicum ) வடிவங்களைக் கொண்டு பெற நினைப்பது பயனற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு அதன் மிகப் பழைய வடிவத்தைக் கண்டுபிடிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரவானின் மரத்தால் ஆன தலை
அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். அவையாவன 1) விஷ்ணு புராணம் (4:20:12). இதன் காலம் பிற்கால வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை இருக்கலாம் 2) பாகவத புராணம் (9:22:32). இது பொதுவாக வேதகாலத்தியது என கருதப்பட்டாலும், நவீன அறிஞர்கள் இதன் காலம் கிபி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள். மகாபாரதத்தின் சமசுகிருதப் பதிப்பில், 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் போது அரவான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும், மகாபாரதத்தின் தமிழ் பதிப்புகள் போர் துவங்குவதற்கு முன்பே அவர் காளிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுகின்றன. ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.[24][25] போரிடும் தமிழ் அரசர்கள் வெற்றி வேண்டி வெற்றி தேவியின் முன் தங்கள் குருதியைச் சிந்துவதைச் சித்தரிக்கும் தமிழ் சிற்பங்களைக் குறிப்பிட்டு அதே போல தேவி மகாத்மயம் என்ற புராணத்தின் இறுதியில் வரும் ஒரு காட்சியுடன் அவற்றை ஒப்பிடுகிறார்.(இத்தமிழ் சிற்பங்களில் காட்டப்படும் தெய்வம் கொற்றவை, துர்க்கையுடனும் காளியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது)
ஹில்டிபெய்டல் தெலுங்கு மரபுக் கதைகளில் குறிப்பிடப்படும் பார்பரிக்காவின் தன் பலியினை அரவான் கதையுடன் ஒப்பிடுகிறார். பார்பரிக்கா மகாபாரதத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரம். அரவானைப் போலவே தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு தியாகம் செய்தவர் பார்பரிக்கா. தெலுங்கு மரபுக்கதைகளில் மட்டுமல்லாது இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கார்ஹ்வால், குருட்ச்சேத்திரம், புந்தேல்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளின் மரபுக் கதைகளிலும் பார்பரிக்கா இடம் பெறுகிறார். தலையை வெட்டித் தியாகம் செய்த பின்னும், வெட்டுண்ட தலையின் கண்கள் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் காணும் வரம் பெறுவதே அரவானுக்கும் பார்பரிக்காவிற்கும் உள்ள கவனிக்கத்தக்க ஒற்றுமையாகும்.
தமிழ் இலக்கியத்தில் அரவானின் தியாகச் செயல் பற்றிய முதல் குறிப்பு பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பா என்ற நூலில் காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லபிள்ளை ஆகியோர் எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது.கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்வர் தல புராணம் என்ற நூலிலும் அரவான் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.
அரவான் மரபு பற்றிய விவரங்களைக் கூத்து என்னும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மரபுவழி தெருக்கூத்தில் ”அரவான் களப்பலி” பிரபலமான ஒரு கருப்பொருளாக உள்ளது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போர் நடக்கும் முன்பு காளிக்கு அரவான் தன்னையே பலி கொடுத்த கதையை அரவான் களப்பலி கூறுகிறது. மெலட்டூர், கொடுகிழி மற்றும் ஏர்வாடி போன்ற சிற்றூர்களில் ஆண்டுதோறும் அரவான் களப்பலி பல்வேறு கூத்து வடிவங்களில் அரங்கேற்றப்படுகிறது. கரம்பையில், ஆண்டுத் திருவிழாவின் (ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும்) 18 ஆம் நாளன்று திரௌபதி வழிபாட்டின் ஒரு பகுதியாக அரவான் களப்பலி நிகழ்த்தப்படுகிறது.
தற்காலப் புரிதல்களில் அரவானின் தலை, தியாகத்தை மற்றுமல்லாமல் மீட்டுருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருப்பொருள்களையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலை வெட்டப்பட்ட பின்னரும் அத்தலையினால் மகாபாரதப் போர் முழுவதையும் அரவானால் காணமுடிவதே இத்தகு புரிதலுக்கு அடிப்படை. எடுத்துக்காட்டாக, ராமசாமிப்புலவரின் "மேற்கோள்விளக்கக் கதை அகரவரிசை" (1963) என்ற புத்தகத்தில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதால் தமிழ் நாட்டில் ஒரு நாட்டுப்புற நாயகனாக அரவான் இன்றும் கருதப்படுவதாக கூறப்படுகிறது. அரவான் கதாபாத்திரம் போருக்குச் சமூகம் கொடுக்கும் விலையையும் உணர்த்துகிறது. "என்றும் திருப்தியடையாத போர்க் கடவுள் புசிப்பதற்காகப்" பல தாய்மார்கள் தயக்கத்துடன் போருக்கு அனுப்பி வைத்த எண்ணற்ற அப்பாவிகளை அரவான் நினைவுபடுத்துகிறார். இந்தியவியலாளர் டேவிட் ஷுல்மேன், அரவானின் பலி தமிழ் காப்பிய மரபுகளில் வரும் பாம்புப் பலியின் இன்னொரு வடிவம் என்று கூறுகிறார்.

மகாபாரதம்

மகாபாரதத்தின் முதல் புத்தகமான ”ஆதி பர்வ”த்தில் (தொடக்கங்களின் புத்தகம்) அரவானின் பெற்றோர்களுக்குத் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரவானின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய விவரங்கள் மகாபாரதத்தின் ஆறாவது புத்தகமான “பீஷ்ம பர்வ”த்தில் (பீஷ்மர் பற்றிய புத்தகம்) இடம் பெற்றுள்ளன. மகாபாரதத்தின் ஆறாவது புத்தகத்தில், பாண்டவர்களில் மூன்றாவது சகோதரனான அருச்சுனன், திரௌபதி-பாண்டவர்களின் திருமண விதிமுறைகளை மீறியதால் இந்திரபிரஸ்த (பாண்டவp பேரரசின் தலைநகரம்) நகரத்திலிருந்து ஓராண்டு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் வடகிழக்கு இந்தியாவிற்குச் சென்று, அங்கிருந்த நாக வம்சத்தின் விதவை இளவரசி உலுப்பி என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறந்தார். நாகர்களின் இருப்பிடமான நாகலோகத்தில் அரவானையும் உலுப்பியையும் விட்டுவிட்டு அருச்சுனன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அரவான் ”பரச்சேத்திரத்தில்” (வேறொருவருக்குச் சொந்தமான பகுதி) பிறந்ததாகக் கூறப்படுகிறது. பரச்சேத்திரத்தில் பிறத்தல் என்பது மற்றொருவரின் மனைவிக்கு பிறத்தலைக் குறிக்கிறதென ஹில்டிபைடெல் கருதுகிறார். தனது தாயின் பாதுகாப்பில் நாகலோகத்தில் அரவான் வளர்ந்தார். அருச்சுனன் மீது அரவானின் தாய்வழி மாமனுக்கு இருந்த வெறுப்பு காரணமாக அவர் அரவானை ஏற்றுக்கொள்ளவில்லை. அரவான் வளர்ந்த பிறகு, தனது தந்தையுடன் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் இந்திரனின் (அருச்சுனனின் தந்தை) இருப்பிடமான இந்திரலோகத்திற்கு சென்றார். தனது வளர்ந்த மகனைக் கண்ட அருச்சுனன் குருசேத்திரப் போரில் தனக்கு உதவியாக இருக்கும்படி வேண்டினார்.
இவ்வாறாகப் பாண்டவர்களின் எதிரிகளான கௌரவர்களுக்கு எதிராக, அரவான் தனது தந்தை மற்றும் பாண்டவர்களுக்கு உதவ குருசேத்திரப் போர்க்களத்தை வந்தடைகிறார். போரின் முதல் நாளில், அரவான் சுருதாயுசூ என்பவனுடன் சண்டையிட்டார். சுருதாயுசூ முற்பிறவியில் குரோதவாசா என்ற அரக்கனாக இருந்த சத்திரிய அரசனாவார். பின்னர் அவர் அர்ச்சுனனால் கொல்லப்பட்டார். போரின் ஏழாம் நாளன்று அவந்தி இளவரசர்களான விந்தா மற்று அனுவிந்தா ஆகியோரை அரவான் தோற்கடித்தார். பின்னர் இவர்களும் அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர்.
போரின் எட்டாம் நாளில், காந்தார தேசத்தின் இளவரசர்களுடன் அரவான் போரிட்டார். அவர்கள் சுவாலா அரசனின் மகன்களும் கௌரவர்களின் தாய்வழி மாமனான சகுனியின் இளைய சகோதரர்களுமாவர். கயா, கவாக்சா, விர்சவா, சர்மாவாத், அர்சவா மற்றும் சுகா ஆகிய சகோதரர்கள், கௌரவர்களின் ஒட்டுமொத்த படைவீரர் துணையுடன் அரவானைத் தாக்கினர். ஆனால் அரவானின் நாகர் படை இவர்களில் ஒருவரைத் தவிர மீதமிருந்த அனைவரையும் கொன்றது. எதிரிகளை வதைப்பவன் என்று போற்றப்படும், மாய வித்தையில் கைதேர்ந்தவரான அரவான், வாள் சண்டையில் ஐந்து காந்தார இளவரசர்களைக் கொன்றார், விர்சவா மட்டும் தப்பிவிட்டார்.
இதற்குப் பழிவாங்கும் விதமாக கௌரவர்களின் மூத்த சகோதரன் துரியோதனன், ரிஷ்யசிரிங்கரின் மகனாகிய அரக்கன் அலம்பூசனிடம் அரவானைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டார். இந்த முறை அரவானைப் போன்று அலும்பூசனும் போரில் மாயக் கலையைப் பயன்படுத்தினார். தன்னிடமிருந்த வில்லைக் கொண்டு அலம்பூசன் அரவானைத் தாக்கினார்; ஆனால் எதிர்த்துத் தாக்கிய அரவான், அலம்பூசனின் வில்லை உடைத்தெறிந்து அவனைப் பல துண்டுகளாக வெட்டியெறிந்தார். அப்போதும் அலம்பூசனின் உடல் மீண்டும் தானாக ஒன்றிணைந்தது. பின்னர் அரவான் சேசா (அனந்தா) எனும் பாம்பு வடிவத்தை அடைகிறார், அப்போது அவரது பாம்புப் படை அவரைச் சுற்றி வளைத்து அவரைப் பாதுகாக்கிறது. அப்போது அலம்பூசன் பாம்புகளுக்குப் பகைவனான கருட வடிவத்திற்கு மாறி, பாம்புப் படையைத் தாக்கி அழித்து அரவானின் தலையைக் கொய்து கொல்கிறார். பின்னர் அரவானின் தந்தை வழி சகோதரனான கடோத்கசன் அலம்பூசனைக் கொன்று பழி தீர்க்கிறார்.

பலிக்காகத் தேர்ந்தெடுத்தல்

அரவான் பற்றிய தமிழ் மரபுகளைப் பற்றிய முதல் குறிப்புகள், பெருந்தேவனார் எழுதிய மகாபாரதத் தமிழ்ப் பதிப்பான பாரத வெண்பாவில் (ஒன்பதாம் நூற்றாண்டு) காணப்படுகின்றன. களப்பலி என்ற சடங்கைப் பற்றிச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளில் மட்டுமே களப்பலி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இது போரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் போர் தொடங்குவதற்கு முன்பே செய்யப்படும் சடங்கு. மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்பு கௌரவர்களின் தலைவனும் பாண்டவர்களின் எதிரியுமான துரியோதனன், பாண்டவர்களின் சோதிட வல்லுநரான சகாதேவன் மூலமாக அமாவாசை தினமே (சோதிடம் பார்த்த நாளுக்கு அடுத்த நாள்) களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொள்கிறார் என்று பெருந்தேவனார் விளக்குகிறார். இதனால் துரியோதனன் அரவானிடம் பேசி அவரைக் களப்பலி கொடுக்கச் சம்மதம் பெறுகிறார்.
காளியின் உருவச்சிலை
பாண்டவர்களின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கிருஷ்ணர், துரியோதனனின் திட்டத்தை அறிந்து கொண்டு, அரவான் கௌரவர்களுக்காகத் தியாகம் செய்யாமல் பாண்டவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் வண்ணம் ஒரு திட்டம் தீட்டுகிறார். பாண்டவர்களில் மூத்தவரான தருமனிடம் இதைப் பற்றி ஆலோசித்து, காளி தெய்வத்திற்குப் பலி கொடுப்பதை ஆயுதபூசையின் ஒரு பகுதியாக நிறைவேற்றலாம் எனப் பரிந்துரைக்கிறார். இவ்வாறு பலி கொடுக்கச்செய்வதற்குத் தன்னையும் சேர்த்து நான்கு பேர் பொருத்தமானவர்கள் என்று கிருஷணர் கருதுகிறார். மற்ற மூவர்: கௌரவர்களின் பக்கமுள்ள சால்யன், பாண்டவர்களின் படைத்தலைவர் அருச்சுனன் மற்றும் அரவான். இந்த நான்கு பேரிலிருந்து அரவான் தான் சரியான தேர்வாக இருக்குமென்று கிருஷ்ணர் முடிவு செய்கிறார். அரவான், கிருஷ்ணரின் உத்தரவை ஏற்று பாண்டவர்களுக்காகக் களப்பலியாகச் சம்மதிக்கிறார். துரியோதனனிடம் கெளரவர்களுக்காகக் களப்பலியாவதாக முன்பே வாக்களித்திருந்ததையும் கூறுகிறார்.
பின்னாளில் வந்த தமிழ் நூல்கள் பெருந்தேவனாரின் பதிப்பிலிருந்து மாறுபடுகின்றன. வில்லிப்புத்தூராழ்வாரின் பதினான்காம் நூற்றாண்டு பதிப்பில், கிருஷ்ணர் முதலில் தானே களப்பலியாக முன்வருவதாகவும், அரவான் தானாக முன்வந்து அவருக்குப் பதிலாகத் தான் களப்பலியாகச் சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூலில் துரியோதனன் பற்றிய செய்தி ஏதுமில்லை. கௌரவர்கள் ஒரு வெள்ளை யானையைப் பலி கொடுத்ததை ஈடு செய்ய அரவானைப் பலியிடுவதாக பிற கதைகள் கூறுகின்றன.தஞ்சாவூர் மாவட்டத்தின் நெப்பத்தூர் என்ற கிராமத்திலுள்ள மரபுகள் படி அரவான் மிக வலிமையானவர் என்றும் ஒரே நொடியில் துரியோதனனின் படைகளை அழித்துப் போரே ஏற்படாமல் தடுத்திருந்திருக்கக்கூடிய சக்தியுள்ளவராகவும் நம்பப்படுகிறது. அதனால், கிருஷ்ணர் பெரும்பலியான போர் நிகழ வேண்டும் என்பதற்காக அரவானைப் பலி கொடுப்பதே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்.
தெருக்கூத்து நாடகங்களில், அரவானின் தியாகச் செயலானது தங்கள் தந்தையர்களுக்காக தமது பாலுறவு இன்பத்தையும் இளமையையும் விட்டுக்கொடுத்த யயாதியின் மகன் புரு மற்றும் சாந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறது. இந்த நாடகங்களில், அரவானின் சம்மதம் கிடைத்த பிறகு கிருஷ்ணர் அரவானின் தாயான நாகக்கன்னி உலுப்பியின் அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. முதலில் அரவானின் முடிவை அவனது தாய் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் கடைசியில் தான் காளிக்கு அர்ப்பணிக்கப்படவே பிறந்தவன் என்று அரவான் எடுத்துக்கூறிய பின்னர் அரவானின் தாய் ஒப்புக்கொள்கிறார்.
இந்தக் கதையின் அனைத்து வடிவங்களிலும், இறுதியில் கிருஷ்ணர் சூரிய தேவனையும் சந்திர தேவனையும் கட்டுப்படுத்தி அவர்களின் நகர்வை மாற்றியமைத்து அன்றைய நாளுக்கு ஒரு நாள் முன்னரே அமாவாசை தினம் வரும் வண்ணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தனது உடலின் முதல் பலியைப் பாண்டவர்களுக்காக அரவானால் செய்ய இயலுகிறது. துரியோதனனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மறுநாள் கெளரவர்களுக்காக எஞ்சியிருக்கும் உடலைப் பலி கொடுக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் துரியோதனனுக்குத் தான் செய்து கொடுத்த வாக்குறுதியையும் அரவான் காப்பாற்றினார்.

மூன்று வரங்கள்


பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரு வரம் மட்டுமே வாங்கியதாகக் கூறப்படுவது, போருக்கு முன்பு அரவான் தன்னைத் தியாகம் செய்து கொண்டதாகத் தமிழ் மரபுகளில் கூறப்படுவதையும், மகாபாரதத்தின் முந்தைய சமசுகிருத பதிப்பில் அரவான் போரிட்டு மடிவதாகச் சொல்லப்படுவதையும் பொருந்திப் பார்க்க 9ஆம் நூற்றாண்டில் நடந்த முயற்சியைக் குறிக்கிறது என ஹில்டிபைடெல் கருதுகிறார்.
கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரு மரபுகளிலும், அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாக நம்பப்படுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பில், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. ஆனால் போரின் எட்டாம் நாளில் அரவான் இறந்த பிறகு வெட்டுண்ட தலையுடன் போர் முழுவதையும் கண்டானா என்பது பற்றிய தகவல்களை வில்லிப்புத்தூராழ்வார் குறிப்பிடவில்லை.
பேளூர் கோவிலில் மோகினி சிலை. நாட்டார் மரபுகளில் கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டு அரவானை மணந்தார் என நம்பப்படுகிறது.
மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புற சடங்குகளில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்கிறார். (மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர்). ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க கிருஷ்ணர் மோகினி என்ற பெண் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் இருந்ததாக கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது. அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாள் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறி போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது.தெருக்கூத்து கதைகளில் சிறப்பான முறையில் திருமணச் சடங்குகள் நடைபெறுவது போலவும் அதனையடுத்து மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காண்பிக்கப்படுகின்றன. இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதை வடிவில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது தெளிவாகச் சொல்லப்படுகிறது. திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை. வேறு சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.
முதல் வரமும் (வீர மரணம்) மூன்றாவது வரமும் (திருமணம்) கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் உருவானவை என்றும் இரண்டாவது வரம் திரௌபதி வழிபாட்டு மரபில் உருவானது என்று ஹில்டிபைடெல் கூறுகிறார். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், வீர மரணம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய இரண்டு சடங்குகளும் இடம்பெறுகின்றன. இச்சடங்குகளை திருநங்கைகள் நிகழ்த்துகின்றனர். ஆனால் திரௌபதி வழிபாட்டு மரவில், கம்பத்தில் பொருத்திய களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலை, 18 நாள் நடைபெறும் போர் நிகழ்வுகளைப் பார்ப்பதைக் குறிக்கும் சடங்கே முக்கிய நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரௌபதி வழிபாட்டு மரபின் நூல்களில் இந்த வரம் மட்டுமே இடம்பெறுகிறது; மற்ற இரு வரங்கள் காணப்படவில்லை.
போருக்கு முன்பு அரவானைப் பலி கொடுப்பது முதல், இரண்டாவது வரங்களுக்கு முரணாக உள்ளது. ஆனால் இந்த மரபுகளில் இம்முரணுக்குத் தனிப்பட்ட விளக்கங்கள் உள்ளன. போருக்கு முன்பு தன்னைத்தானே பலி கொடுப்பது போரின் போது வீர மரணம் அடைதல் என்ற நிகழ்வுக்கு முரணாக உள்ளது. மேலும் இவை இரண்டுமே உயிருடன் இருந்து போர் நிகழ்வுகள் முழுவதையும் காணுதல் என்பதற்கு முரணாக உள்ளன. கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்கு பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. போரின் அனைத்து நிகழ்வுகளையும் அரவான் தொடர்ந்து கவனித்தார் என்ற இரண்டாவது வரம் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் பெரிதாகக் கருதப்படுவதில்லை. மற்றொரு புறம், திரௌபதி வழிபாட்டு மரபில் முதல் வரமான வீர மரணம் பெரிதாகக் கருதப்படவில்லை. மேலும் அரவான் தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்கள் மூலம் போரின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்க முடியும் எனக் கூறுவதன் மூலம், அரவான் தொடர்ந்து போரைப் பார்த்தது குறித்த இரண்டாவது வரம் பற்றிய குழப்பத்தை இந்த மரபு தீர்க்கிறது. மூன்றாம் கண்ணோட்டம் ஒன்று, அரவான் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட பிறகு அரவானின் உடல் மீண்டும் ஒன்றிணைந்து முழுமையடைந்ததாகவும், எட்டாம் நாள் அவர் தலை துண்டிக்கப்படும் வரை வீரத்துடன் சண்டையிட்டதாகவும், தனது வெட்டுண்ட தலையிலிருந்த கண்களின் மூலம் போரின் எஞ்சிய நாட்களைக் கண்டார் என்றும் கூறி, இந்த மூன்று வரங்களையும் பொருத்தி விளக்குகிறது.
தமிழ் மரபுகளில் அரவானின் போருக்கு முந்தைய பலி பொதுவான ஒன்றாக உள்ளது. அரவான் கேட்ட வரங்கள் கிடைக்கப்பெற்றதும் பலிக்குத் தயாராகிறார். பின்னர் குருட்சேத்திர போர்க்களத்திற்குச் செல்கிறார். தருமன் தனது ஆயுதக் கூடத்தில் காளியை வணங்கிய போது அரவான் தனது அணிகலன்களையும் மார்புக் கவசத்தையும் நீக்கிவிட்டு வணங்கினார். அடுத்து அவர் தனது உடலை 32 துண்டுகளாக வெட்டினார். (அவரது உடலின் 32 கச்சித அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு துண்டு என்ற கணக்கில்) பின்னர் அவற்றை தருமன் காளி தேவிக்குப் படைத்தார். தெருக்கூத்தில் அரவானாக நடிக்கும் நடிகர் கழுத்திலிருந்து கீழ்நோக்கி ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு இந்தக் காட்சிகளை நடித்துக்காட்டுவார். இந்தக் காட்சியில் நடிக்கும் நேரத்தில் அரவானின் ஆன்மா நடிகரின் உடலில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தெருக்கூத்து நடைபெறும் மேடையில் இப்பலியைக் குறிக்கும் வகையில் சிலநேரங்களில் கோழி பலியிடப்படும். வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதத்தில் அரவானின் தன்பலியை முழுமையாக்க காளிக்கு யானை ஒன்று பலிகொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அரவான் தனது சதைகளை வெட்டியெடுத்து, அவரது தலையும் எலும்புக்கூடும் மட்டுமே மிஞ்சியிருக்கும் தருணத்தில். கிருஷ்ணர், அரவானின் தாத்தாவும் உலுப்பியின் தந்தையுமான ஆதிசேஷனை வணங்குமாறு அரவானுக்கு அறிவுறுத்துகிறார். அப்போது ஆதிசேஷன் அரவானின் உடலைச் சுற்றிக்கொண்டு அவனது சதையாக மாறுகிறார், இதனால் அவனது உடல் மீண்டும் வடிவம் பெறுகிறது.[60] கிருஷ்ணர் இரண்டாவது வரத்தை நிறைவேற்ற, பலம் வாய்ந்த அரவானைத் தோற்கடிக்கும் வகையில் எதிரிப் படையிலிருக்கும் ஒருவனை மிகவும் வலிமையானவனாக மாற்றுகிறார். இதன் மூலம் அரவானுக்கு வீர மரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு கிருஷ்ணர் அலம்பூசனைத் தேர்வு செய்தார். பிறகு அசரீரி மூலமாக அலம்பூசனை கருட வடிவம் எடுக்க யோசனை கூறுகிறார் அல்லது அலம்பூசனுக்கு உதவ உண்மையான கருடனை அனுப்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதிசேஷன், தனது எதிரியான கருடனைக் கண்டதும் பயத்தின் காரணமாக அரவானிடமிருந்து விலகிச் செல்ல, பாதுகாப்பற்ற நிலையில் சோர்வாக இருந்த அரவானை அலம்பூசன் தலையைக் கொய்து கொல்கிறார்.

அரவானிலிருந்து கூத்தாண்டவர்

கூவாகம் பகுதியில் கூறப்படும் ஒரு மரபுக் கதையில், அரவான் எப்படி கூத்தாண்டர் என அழைக்கப்படலானார் என விவரிக்கப்படுகிறது. போருக்குப் பிறகு, கௌரவர்களை அழித்தது குறித்து பாண்டவர்கள் பெருமை பேசிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணர் இந்த போர் முழுவதையும் நேரில் பார்த்தவரான அரவானிடம் "இந்த போரில் பாண்டவர்கள் வெற்றியடைய உண்மையான காரணம் யார்"? என்று கேட்கிறார். எதிர்களின் தலையைக் கொய்யும் கிருஷ்ணரின் சக்கரம் மற்றும் அவர்களின் குருதியைச் சேகரிக்கும் சங்கு ஆகிய இந்த இரண்டையும் தான் கண்டதாக அரவான் பதிலளித்தார். வெற்றிக்கு முழுக்காரணம் கிருஷ்ணர் என உணர்த்துவதாகவே இந்தப் பதில் கொள்ளப்படுகிறது. செருக்கும் எளிதில் கோபம் கொள்ளும் குணமும் கொண்டவருமான பீமனுக்கு அரவானின் இந்த பதில் கடும் கோபத்தை உண்டாக்கியது. (போரை வெல்லுவதில் பீமன் ஆற்றிய பெரும் பங்கு மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது). பீமன் அரவானைத் தாக்குவதற்கு முன்பு, அரவானது தலையை கரபரிகா ஆற்றில் வீசுமாறு கிருஷ்ணர் ஆணையிட்டார். ஆற்றில் விழுந்து குழந்தை வடிவம் பெறுகின்ற அரவானை ஆற்றங்கரையோரத்தில் இருந்த சந்திரகிரி நகரின் அரசன் கண்டெடுக்கிறார். அரசன் குழந்தையைத் தூக்கும் போது "குவா குவா" என்று குழந்தை அழுததால் அந்த இடத்துக்கு கூவாகம் என்றும் அந்தக் குழந்தைக்கு கரபாலன் ("நாணல்-குழந்தை") என்றும் பெயரிட்டார்.
காரபாலன் வளர்ந்த பின்னர், ஒரு போரில் தனது வளர்ப்புத் தந்தையைக் காயப்படுத்திய கூத்தசூரன் என்ற அரக்கனைக் கொல்வதாக இக்கதையில் கூறப்படுகிறது. இந்த மரபின் மகாதேவியாக வணங்கப்படும் திரௌபதி அம்மன், கரபாலனுக்கு கூத்தாண்டவர் (கூத்தசூரனை கொன்றவன்) என்ற புதிய பெயரை வழங்கி ஆசீர்வதித்து கூவாகத்தில் அவருக்கு கோவில் ஒன்றையும் அருளுகிறாள். இந்த மரபிற்குள்ளேயும் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் சில கதை வடிவங்களில், குழந்தையைச் சந்திரகிரியின் அரசியான கிருபான்ஞ்சி என்பவர் கண்டெடுத்தாகக் கூறப்படுகிறது.பிற கதை வடிவங்களில் சந்திரகிரியின் அரசன் மற்றும் கூவாகம் கோவில் பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, இவை அரக்கன் கூத்தசூரனைப் பற்றி அதிகம் கூறுகின்றன. மேலும் தலையை மட்டும் கொண்டிருக்கும், நீரில் பிறந்த ஒருவனால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றதைப் பற்றியும் கூறுகின்றன. கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு, இந்த அரக்கனை அரவான் கொல்வார் என்று கடவுள்களுக்குக் கூறுகிறார். இதை மனதில் கொண்டே அரவானின் தலை ஆற்றில் தூக்கி எறிய ஆணையிடுகிறார். பின்னர் அது கூத்தன் ("நீரில் பிறந்தவன்") என்ற குழந்தையாக மாறி அரக்கனைக் கொல்கிறது.