Friday, May 31, 2013

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?

 
ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்.
 
ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
 
சாமுத்திரிகாலட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?
 
1. கால், பாதம்:
 
 
 
ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இரு க்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத் தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.
 
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.
 
மேலும் பிரதானமாக கெண்டைக் கால் பருத்து இல்லாமல் இருப் பது நலம் ஆணாக இருந்தாலும் பெண் ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்ப வர்கள் ஆரோக்கியமாக வும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாக வும்) இருப்பார் கள்.
 
சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
 
காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண் ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல் லாம லும் இருக்கலாம்.
 
 
 
2. தொடை:
 
 
 
 
 
 
 
பெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.
 
3. இடை:
 
 
 
 
 
 இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.
 
4. மார்பகங்கள்:
 
 
 
 
 
 
பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.
 
5. கைவிரல்:
 
பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.
 
6. கழுத்து:
 
 
 
 
 
 பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.
 
7. கண்கள்:
 
 
 
 
 
 
 
 
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
 
உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
 
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழி களில் சில அமைப்புகள் உண்டு.
 
உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.
 
விழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந் தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பா ர்கள்.
 
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்க ள் என்று சொல்வார்களே… அது போல இருப்பார்கள்.
 
மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
 
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற் படும். அடர்த்தி இல்லாமல் பரவ லாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.
 
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
 
 
 
 
 முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள்.
 
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பா வியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
 
8. கூந்தல்:
 
 
 
 
 
 
 
பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.
 
கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
 
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாக வும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
 
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென் மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
 
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும்.
 
9. வாசம்:
 
 
 
 
 
பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்ன ம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.
 
10. மூக்கு:
 
 
 
 
 
 மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.
 
எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.
 
ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
 
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்து வார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர் களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப் பார்கள்.
 
 
 

 
 மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்ட 
வர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
 
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப் பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
 
 
 
வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர் களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
 
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வா ர்கள்.
 
11. நெற்றி:
 
 
 
 
 
 
 சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. 
 உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
 
நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடு களுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
 
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்கவேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

Wednesday, May 22, 2013

இளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் "லும்பினி" என்னும் இடத்தில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.

வர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.

கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார்.

கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் "காசா" என்னும் இடத்தில் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற" (
ஞானம் பெற்றதை) ஒரு புத்தர் என்பதை  உறுதியாக உணர்ந்தார்.
அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் "குஷ் நகரில்" அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.
புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை.
ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.

உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.

கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை.
ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது.
வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது

வைகாசி விசாகமும் அதன் சிறப்பும்

விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.


விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும்,
க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும்,
பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.
வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தைக் குறிப்பதாகும். இத் தினம் பலவகைகளில் சிறப்புப் பெற்றது. விசாக நட்சத்திரக் கூட்டம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு இணைந்தது. வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மாந்தர்கள் வாழ்வுடன் தொடர்புடையவை கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களின் சிறப்புகள், வேதங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் பல கோடி நட்சத்திரங்கள் தெரியும். ஆனாலும், இவற்றில் இருந்து அஸ்வினி, பரணி என 27 நட்சத்திரங்களை மட்டுமே சப்தரிஷிகளும் யோகீஸ்வரர்களும் நமக்கு தேர்வு செய்து தந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு வடிவம் கொண்டவை. உதாரணமாக, நூறு நட்சத்திரங்கள் கொண்ட சேர்க்கையே ‘சதயம்’ எனப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு குணாதிசயம், சிறப்பம்சம் உண்டு. கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன. கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்.

மேலும் தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் வைகாசி விசாகமும் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

சிறப்பு:
முக்கியமாக வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார். எனவே முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது.

சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகமாக (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.

சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம்.

இனி விசாகம் பிற தெய்வங்களுடன் மகான்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்று காண்போம்.
தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.
புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான் என்று பெளத்த மதம் கூறுகின்றது. ‘புத்த பூர்ணிமா’ (வெசாக் பெருநாள்) என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.
இராம - இராவண யுத்தத்தின் போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும் அது காட்டிய நன்மை, தீமைகளையும் மனதில் கொண்டே இராமன் போரிட்டு இராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் ஆணை இட்டதாக தஞ்சை பெரிய கோயில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது. இப்படி வைகாசி விசாக தினத்தின் பெருமைகள் வானளாவியது.
உலகமெங்கிலும் உள்ள, (பறாளை சிவசுப்பிரமணியர் ஆலயம் உட்பட) முருகன் கோயில்களில் இத் தினத்தில் மஹோற்சவ விழாக்கள் நடை பெறுகின்றன.
முருகன் அவதாரம்:

பத்மாசுரன் (சூரபத்மன்) என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற வரத்தினையும் பெற்றான்.

இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தலானான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். தேவர்கள் சிவபிரானிடம் சென்றபோது, அவர் தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார். அவருக்கு பணிவிடை செய்யும் அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும் என்ற காரணத்தை பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழித்து தம்மைக் காப்பாற்ரும்படி இரந்து வேண்டினர். தேவர்களின் குறை தீர்க்க எண்ணிய சிவபிரான்;

உடனடியாக விநாயகரை அனுப்பி அவர்கள் குறையைத் தீர்த்துர்க்கலாம்; ஆனால், விநாயகரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. என்பதனால் பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அவனை அழிக்க தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கினார், அவற்றை வாயுபகவான் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார். சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களை அவை அடைந்ததும் ஆறு மலர்களில் ஆறு குழந்தைகள் தோன்றின.

அவர்களை எடுத்து வளர்ப்பதற்காக பிரம்மா ஆறு கார்த்திகை பெண்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஆறு குழந்தைகளையும் பாலூட்டி தாலாடி வளர்த்து வரும் காலத்தில் உமாதேவியார் சிவபிரான் சகிதம் அங்கு சென்று அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அனைத்தபோது அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றினைந்து ஓர் உடல் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுகனாக தோன்றினார் என்பது புராண வரலாறு, கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் "கார்த்திகேயன்" எனவும், ஆறுமுகம் கொண்ட திருமுருகனாக தோன்றியதனால் "ஆறுமுகன்" எனவும் பெயர் பெற்றார்.

இவருக்கு "சுப்பிரமணியன்" என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.

முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை

பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் அவதரித்த தினம் என்பது மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரத்துக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய நாள். புத்தர் பெருமான் அவதரித்த நாள் (புத்த பூர்ணிமா). ‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம்.

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோயில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் மிகவும் உகந்த நாள். இங்கு சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் பெருமாள் இந்த நாளில் மட்டுமே சந்தனக் காப்பு நீக்கி அருள் பாலிக்கிறார். அதற்கு அடுத்த நாளே 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி மீண்டும் காப்பு தயாராகி, சுவாமி மீண்டும் அதற்குள் சென்றுவிடுவார்.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும்.

சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார்.

வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.

திருமண சடங்குகளும்,விளக்கமும் !

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்..,

திருமண சடங்குகளும்,விளக்கமும்;
----------------------------------------------------
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்..,

1.நாட்கால் நடல்;
                       இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில்  வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ ,  தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்;
                       திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும். 

3.கலப்பரப்பு;
                  மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்;
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5.முளைப்பாலிகை : 
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6.தாரை வார்த்தல் : 
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

7.தாலி கட்டுவது;
இதை தனி பதிவாக எழுதிவிட்டேன். மீதமுள்ள சடங்குகளின் விளக்கங்கள் அடுத்த பதிவில்...,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். 
 
1.நாட்கால் நடல்

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்


திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.

3.கலப்பரப்பு


மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்;
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5.முளைப்பாலிகை


நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6.தாரை வார்த்தல்


தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

7.தாலி கட்டுவது


தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில்தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னடக்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை,உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.


8. ஹோமம் வளர்த்தல் : 

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கும் , மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9.கும்பம் வைத்தல் :
கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் .

கும்பவஸ்திரம் ------------------- உடம்பின் தோல்
நூல்-------------------------------- நாட நரம்புகள்
குடம் ------------------------------ தசை
தண்ணீர் -------------------------- இரத்தம்
நவரத்தனங்கள் ------------------ எலும்பு
தேங்காய் ------------------------- தலை
மாவிலை ------------------------ தலைமயிர்
தருப்பை ------------------------- குடுமி
மந்திரம் -------------------------- உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

10.அம்மி மிதித்தல் :

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.அம்மி மிக உறுதியுடனும்,ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும்,கணவர்,மாமானார்,மாமியார்,நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
 
11.அருந்ததி பார்த்தல் :


அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள்.இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.ஏழு நட்சத்திரங்களில்,ஆறாவதாக(நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள்.அதேபோல் அவர்களுடைய மனைவிகளும்,இந்திரனனின் மேல் சபலப்பட்டவர்கள்.ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து,மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும்,எண்ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியைபோல்
கண்ணியமாகவும்,கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.


12.ஏற்றி இறக்குதல் : 


மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .

13. அடை பொரி : 


பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

14. நிறை நாழி : 


நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.

15.ஒலுசை : 


ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார் கொடுப்பது . ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்

16.மணமகள் பொங்கலிடுதல் :


முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது . புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

17. பிள்ளை மாற்றுவது : 


திருமண சடங்குகளும்,விளக்கமும்;


எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் . இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம் . பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது . திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ - திருவள்ளுவரின் வாக்காகும். நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18. மறுவீடு : 


மணமகளின் பெற்றோரும் - உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று - விருந்துண்ட் மகிழ்ந்து - உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே - ம்றுவீடு ஆகும்.

19. கோவிலுக்கு அழைத்துச்செல்லல் : 


நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .

Friday, May 17, 2013

மோதிரம் அணிவது ஏன்?

 
 
 

மோதிரம் அணிவது ஏன்?
----------------------------------
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் உங்களை குறிக்கிறது
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
 
  விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் உங்களை குறிக்கிறது
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

Thursday, May 16, 2013

கொலஸ்ட்ரால் ஓர் விளக்கம்

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
  • Total Cholesterol <—>200 mgm%  மொத்த கொலஸ்ட்டிரால்
  • LDL Cholesterol <—>100 mgm%  குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • VLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
  • HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

  • எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
  • ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
  • கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
  • பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
  • ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
  • அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
  • ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
  • மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  • ஒமேகா 6 உள்ள உணவுகள்
  • சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்

  • · சீரான உடற்பயிற்சி
  • · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • · மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • · அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • · யோகாசன பயிற்சி செய்வது,
  • · தியானப் பயிற்சி செய்வது .

கிரீன் டீயின் மருத்துவகுணங்கள்

சீனர்கள் தந்த மிகப்பெரிய கொடை தேநீர். அதிலும் கிரீன் டீ ஒரு வரப்பிரசாதம்தான். பச்சைத்தேயிலை செடியின் நுனிக் கொழுந்து இலைகளை பறித்து அதன் பசுமைத்தன்மை மாறாமல் பதப்படுத்தி வெந்நீரில் அருந்தும் வண்ணம் தயார் செய்யப்படுவதையே கிரீன் டீ என்கிறோம். சாதாரன டீயை விட கிரீன் டீயில் அதிக நன்மை உள்ளது.
கிரீன் டீயின் மகிமைகள்
*புற்று நோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்கான செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது.

*ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திகிறது

images*ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்

*ரத்த குழாயில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது

*உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது.

*எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்வை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது

*நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை நீக்குகிறது

images1*பல் சொத்தை, வாய் துற்நாற்றத்தை தடுக்கிறது

* ஞாபக சக்தி அதிகரிக்கிறது

*பருக்கள் வராமல் தடுக்கிறது.

*என்றும் இளமையாக வைக்க உதவுகிறது

*சருமத்தை பாதுகாக்கிறது

*வயதான பின்பு வரும் ஞாபக மறதி, நரம்பு தளர்ச்சியை தடுக்கிறது.

Tuesday, May 14, 2013

திருப்பதியின் ரகசியங்களும் அதன் அதிசியங்களும்






திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலைவாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசியங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றின் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

 பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள். திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில.....
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப்பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும். இந்த பாறைகளும் ஒரேவிதமானவை

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.  இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறையில் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை.  ஏழுமலையானின் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால் வெடிப்பதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்ப்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.  உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரப்பாக இருக்கும்.ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலிஷ்  போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.



திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகப் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, ரபாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குச் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழு நிளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.  வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வெரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்தும், கஸ்தூரி சைனாவிலிருந்தும், புனுகு பாரிஸ்லிருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.  அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.

8.ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து ப்க்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9.  சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்க்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகள் செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை, இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ 100 கோடி.உ

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர்,  கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசர் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13.ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிரிய விக்கிரகம் கி.பி. 966 ஜுன் 8 ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குருநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டது அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்தி உள்ளார்.

14.திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளி கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்ச்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16.சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெறுமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளனர். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமாள் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார் அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18.ஏழுமலையானின் ஸ்தல விருட்சகம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. கி.பி. 1781 ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைசேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை பிராத்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21.ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி கி.பி. 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடிபூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடாக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கு வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

24. ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது.  ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும் .வடகலை சம்பிரதாயத்தில் "வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யபடும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி. 1543 ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி. 1764ல் நிஜாம் தெளலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம்  படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27.திருவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானை கடவுளாக வழிப்பட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.