Monday, April 15, 2013

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம்

 
சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், சோமவார விரதம்!
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான் . அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்த வரை தானம் செய்ய வேண்டும். அதன்பின் பகல் முழுவதும் உண் ணாமல் விரதம் இருந்துமுன் இரவில் ஒருவேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டு ம். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதி யர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்ன தானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னி டத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார். 











கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 




ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப் படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகாவிஷ்ணுவை விட்டு, லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்ப வர்களுக்கு மறுபிறவி இல்லை. கார் த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். ஆலயத்தில் சுவாமிக்கு முன் பூஜைநேரத்தில் ஷாடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.
 
 
 
 
கார்த்திகைப்பொரி மிகவும் வெண்மை யாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். வெண் பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல்பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர் த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன் றுவான் என்பது தத்துவம்.
 
 
 
 
 
 எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றால நாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவ தும் உத்தமம். நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி அவனது பொற்பாதத்தில் சரணடை வோம்.

கௌரவர்களின் பெயர்கள்



மஹாபாரதத்தில் பாண்டவர்கள் எத்த‍னை பேர்? அவர்கள் பெயர்கள் என்ன‍ என்று கேட்டால், ஐந்து பேர், மற்றும் அவர்களது பெயர் கள் தருமன், பீமன், அர்ஜுனன், நகுளன் மற்றும் சகாதேவன் என்று சட்டென்று உங்களிடமிருந்து, பதில் வரும். இதே கௌரவர்கள் எத்த‍னை பேர் என்று கேட்டால், 100 என்று சொல்வீர்கள்.  ஆனால் அவர்களது பெயர்களை சொல்ல‍ச் சொல்லிக்கேட்டால், துரியோதனன், துச்சாதனன் என்ற இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லி பேந்த பேந்த விழிப்பீர்கள் அல்ல‍வா? இதோ அந்த கௌரவர்கள் பெயர்கள் துரி யோதனன்  உட்பட 100 சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும் கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்து பயனுறுங்கள்.
.

இதோ அந்த கௌரவ சகோதரர்களின் பெயர்கள்
.
1 துரியோதனன்
.
2 துச்சாதனன்
.
3 துஸ்ஸகன்
.
4 துஸ்ஸலன்
.
5 ஜலகந்தன்
.
6 சமன்
.
7 சகன்
.
8 விந்தன்
.
9 அனுவிந்தன்
.
10 துர்தர்ஷன்
.
11 சுபாகு
.
12 துஷ்ப்ரதர்ஷன்
.
13 துர்மர்ஷன்
.
14 துர்முகன்
.
15 துஷ்கர்ணன்
.
16 விகர்ணன்
.
17 சலன்
.
18 சத்வன்
.
19 சுலோசன்
.
20 சித்ரன்
.
21 உபசித்ரன்
.
22 சித்ராக்ஷன்
.
23 சாருசித்திரன்
.
24 சராசனன்
.
25 துர்மதன்
.
26 துர்விகாஷன்
.
27 விவில்சு
.
28 விகடிநந்தன்
.
29 ஊர்ணநாபன்
.
30 சுநாபன்
.
31 நந்தன்
.
32 உபநந்தன்
.
33 சித்ரபாணன்
.
34 சித்ரவர்மன்
.
35 சுவர்மன்
.
36 துர்விமோசன்
.
37 அயோபாகு
.
38 மகாபாகு
.
39 சித்ராங்கன்
.
40 சித்ரகுண்டலன்
.
41 பீமவேகன்
.
42 பீமபேலன்
.
43 வாலகி
.
44 பேலவர்தன்
.
45 உக்ராயுதன்
.
46 சுஷேணன்
.
47 குந்தாதரன்
.
48 மகோதரன்
.
49 சித்ராயுதன்
.
50 நிஷாங்கீ
.
51 பாசி
.
52 வ்ருந்தாரகன்
.
53 த்ரிதவர்மன்
.
54 த்ருதக்ஷத்ரன்
.
55 சோமகீர்த்தி
.
56 அந்துதரன்
.
57 த்ருதசந்தா
.
58 ஜராசந்தன்
.
59 சத்யசந்தன்
.
60 சதாசுவக்
.
61 உக்ரஸ்ரவஸ்
.
62 உக்ரசேனன்
.
63 சினானி
.
64 துஷ்பராஜா
.
65 அபராஜிதன்
.
66 குந்தசாயி
.
67 விசாலாக்ஷன்
.
68 துராதரன்
.
69 த்ருதஹஸ்தன்
..
70 ஸுஹஸ்தா
.
71 வாதவேகன்
.
72 சுவர்ச்சன்
.
73 ஆதித்யகேது
.
74 பஹ்வாசி
.
75 நாகதத்தன்
.
76 உக்ரசாயி
.
77 கவசி
.
78 க்ரதாணன்
.
79 குந்தை
.
80 பீமவிக்ரன்
.
81 தனுர்தரன்
.
82 வீரபாகு
.
83 அலோலுமன்
.
84 அபயா
.
85 த்ருதகர்மாவு
.
86 த்ருதரதாஸ்ரயன்
.
87 அநாத்ருஷ்யன்
.
88 குந்தபேடி
.
89 விராவை
.
90 சித்ரகுண்டலன்
.
91 ப்ரதமன்
.
92 அமப்ரமாதி
.
93 தீர்க்கரோமன்
.
94 சுவீர்யவான்
.
95 தீர்க்கபாகு
.
96 சுஜாதன் (சுஜாதன் என்பது பெண் பெயர். இப்பெயரை இந்த ஆணுக்கு வைக்க‍ப்பட்டுள்ள‍து.
.
97 காஞ்சனத்வாஜன்
.
98 குந்தாசி
.
99 விராஜஸ்
.
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்…)
.
101 துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்)

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும்!



27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப்பெயர்களும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து தெரிந்து கொள்ளுங்கள்

1. அசுவினி –    புரவி
 
2. பரணி   -  அடுப்பு     
 
3. கார்த்திகை –    ஆரல்
 
4. ரோகிணி –    சகடு     
 
5. மிருகசீரிடம் –    மான்றலை
 
மூன்றாம் பாதம் –    மிதுனம்
 
6. திருவாதிரை –    மூதிரை     
 
7. புனர்பூசம் –    கழை     
 
8. பூசம் –    காற்குளம்     
 
9. ஆயிலியம் –    கட்செவி     
 
10. மகம் –    கொடுநுகம்     
 
11. பூரம் –    கணை     
 
12. உத்தரம் –    உத்தரம்     
 
13. அத்தம் –    கை     
 
14. சித்திரை –    அறுவை     
 
15. சுவாதி –    விளக்கு     
 
16. விசாகம் –    முறம்     
 
17. அனுஷம் –    பனை     
 
18. கேட்டை  -   துளங்கொளி
 
19. மூலம் –    குருகு     
 
20. பூராடம் –    உடைகுளம்
 
21. உத்திராடம் –    கடைக் குளம்
 
22. திருவோணம் –    முக்கோல்
 
23. அவிட்டம் –    காக்கை     
 
24. சதயம் –    செக்கு     
 
25. பூரட்டாதி –    நாழி   
 
26. உத்திரட்டாதி –    முரசு     
 
27. ரேவதி –    தோணி

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?


கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி  விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.


மோதிர விரல் – கட்டை விரல்





 மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

Wednesday, December 12, 2012

மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை

 
மலர்களில் மணம், நிறம் மட்டும்தான் உண்டு என்று பலர் நினைக்கின்றனர். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் பூக்கள்.

இதனால்தான், நம் முன்னோர்கள் இறைவனை பூஜிப்பதற்கும், பெண்களின் தலைக்கு சூடவும் மலர்களை பயன்படுத்தினர்.

மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.

இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

தற்பொழுது, ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப்பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.

அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தனர்.

அதனால் நோய்கள் குணமாவதையும் உணர்ந்தனர். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

மலர்களிலே அவள் மல்லிகை என்று கவிஞன் பாடிவைத்தான்.

அதன்படி மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம். மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Friday, December 7, 2012

புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...


சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.


சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.

ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.







































கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

Wednesday, December 5, 2012

விளக்குப் பூசை விளக்கம்

விளக்கு வழிபாடு


ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது. நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண்டும். உள்ளும் புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான இருள் அகலவே விளக்கு வழிபாடு!
காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடும் வீ டுகளில் லட்சுமி குடியிருக்கிறாள்.
ஒரு வீட்டின் பூசை அறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிவது சிறப்பு!

குத்து விளக்கின் ஜந்து முகங்கள்

பொதுவாக ஜந்து முகம் கொண்ட குத்து விளக்கையேற்றி வழிபடுவது வழக்கம். அந்த ஜந்து முகங்களும் பெண்களுக்குரிய ஜந்து குணங்களைக் குறிக்கின்றன.
1.  அன்பு 
2.  மனவுறுதி 
3.  நிதானம்
4.  சமயோசித புத்தி
5.  பொறுமை
ஆகியவற்றைக் குறிக்கின்றன.

திரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை

1. தாமரை போன்ற ஆசனம்- பிரம்மா
2. நெடிய தண்டு- விஷ்ணு
3. நெய்-அகல்- ருத்திரன்
4. திரியின் முனைகள்- மகேஸ்வரன்
5. நுனி- சதாசிவன்
6. நெய்- நாத தத்துவம்
7. திரி- விந்து தத்துவம்
8. சுடர்- திருமகள்
9. பிழம்பு- கலைமகள்
10. ஜோதி- பிரம்மம்

விளக்கும் எண்ணெயும் 

விளக்கு எரிக்கக் கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.பின்வருவன நன்மை தரும்.

1. நெய் – சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும்.

2. நல்லெண்ணெய் – எல்லாப் பீடைகளையும் விலக்கும்.

3. விளக்கெண்ணெய் – உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர், சுகம், தாம்பத்திய சுகம், ஆகியவற்றை விருத்தி செய்யும்.

முக்கூட்டு எண்ணெய்

வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். இது குலதெய்வத்திற்கு உகந்தது.
  
ஜங்கூட்டு எண்ணெய்

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து ஏற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம்(45 அல்லது 48) நாட்கள் பூசை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.

விடியற்காலை விளக்கு வழிபாடு

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

விளக்கும் முகங்களும்

* ஒருமுகம் ஏற்றி வழிபடுவது – மத்திய பலன்

* இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது- குடும்ப ஒற்றுமை பெருகும்

* மூன்று முகம் ஏற்றி வழிபடுவது -புத்திர சுகம் தரும்

* நான்கு முகம் ஏற்றி வழிபடுவது – பசு, பூமி இவற்றைத் தரும்

* ஜந்து முகம் ஏற்றி வழிபடுவது – செல்வத்தைப் பெருக்கும்

திசைகளும் பலன்களும்

1. கிழக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

2. மேற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்,       பங்காளிப்பகை இவை நீங்கும்.

3. வடக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

4. தெற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும் பாவம், அபசகுணம்.

விளக்குப் பூசைக்கு ஏற்ற நாட்கள்

அன்றாடம் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. விசேஷட நாட்களில் விளக்குப் பூசை செய்வது மேலும் பல நன்மைகள் தரும்.  விசேஷநாட்கள் பின்வருமாறு
1. வெள்ளிக் கிழமை 2. கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருகோணம் ஆகிய நாட்கள் 3. பெளர்ணமி 4. அமாவாசை 5. சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகள் 6. நவராத்திரி 7. சிவராத்திரி 8. ஆடிச் செவ்வாய் 9. ஆடி வெள்ளி 10. தைச் செவ்வாய் 11. தை வெள்ளி
 வாரத்தில் செவ்வாய், வெள்ளி நாட்களில் ஓம் சக்தி விளக்கேற்றி வைத்து, நம் பெண்கள் 108 மந்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்வதால் நன்மை பல கிடைக்கும்.

பூசைக்கு ஏற்ற விளக்குகள்

குத்து விளக்கு அல்லது பூசை விளக்குகட்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஜம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது. எக் காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூசைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

விளக்கேற்றும் நேரம்

* காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தைத் தரும்.

* மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுயை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.

* காலை விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து,  கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப்புறக் கதவைச் சாத்தி விட வேண்டும். கொல்லைபுறக் கதவு இல்லாதவர்கள் பின்பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

* விளக்கேற்றும் போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை

1. விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.

2. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.

3. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

4. விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

5. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

6. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.

7. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.

8. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றக் கொடுக்கக்கூடாது.


விளக்குப் பூசை செய்வோர்க்குச் சில குறிப்புகள்

1. இரு விளக்கை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்தே வணங்க வேண்டும்.

2. காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் பெருகும்.

 3. காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கி வந்தால் செல்வம் பெருகும், பாவம் விலகும்.

4. விளக்கைக் கிழக்குத் திசை நோக்கி வைப்பது சிறப்பு.

5. திரு விளக்குப் பூசையில் விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வகிட்டிலும் வைத்துவர அவர் தம் கணவர் நலமுடன் வாழ்வர்.

6. பூசை செய்யும்போது விளக்கைத் தலைவாழை மீது வைத்து பூசை செய்வது சிறப்பு.

7. விளக்கின் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.

8. மிகச் சிறியதாக அல்லது மிகப்பெரியதாக சுடர் எரியாமல் விளக்கின் அமைப்பிற்கும் அளவிற்கும் தக்கபடி எரிய வேண்டும்.

9. சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அதற்குக் காரணமான எண்ணெயையோ, திரியையோ உடனே மாற்ற வேண்டும்.

10. விளக்கில் குளம்போல எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

11. விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிரச் செய்வது பெரிய குற்றம்.

12. பூக்களால் அணைத்துக் குளிர வைக்கலாம். திரியை உள்ளே இழுத்து ஒளியை எண்ணெயில் மறையச் செய்யலாம்.

13. அதிகாலை எழுந்ததும் பூசை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

14. தீபம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

15. தீபம் வைத்தவுடன் உடனே முகம் கழுவுதல், கறி காய் நறுக்குதல், அரிசி களைதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
  
அடுப்பேற்ற....

சுமங்கலிப் பெண்கள் காலையில் குளித்துவிட்டு, காமாட்சி அம்மனை விளக்கேற்றி வழிபட்டு, அதிலிருந்து தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றிவர சகல நன்மைகள் ஏற்படும்.

அமாவாசை பெளர்ணமி விளக்குப் பூசை பலன்கள்


சித்திரை: அமாவாசை பெளர்ணமி- தானியம் உண்டாகும்.

வைகாசி: அமாவாசை பெளர்ணமி- செல்வம் உண்டாகும்.

ஆனி: அமாவாசை பெளர்ணமி -திருமணம் நடைபெறும்.

ஆடி: அமாவாசை பெளர்ணமி -ஆயுள் விருத்தி உண்டாகும்.

ஆவணி: அமாவாசை பெளர்ணமி -புத்திரப்பேறு உண்டாகும் 

புரட்டாதி: அமாவாசை பெளர்ணமி -பசுக்கள் விருத்தி உண்டாகும்

ஜப்பசி: அமாவாசை பெளர்ணமி -பசிப்பிணி நீங்கும்.

கார்த்திகை: அமாவாசை பெளர்ணமி- நற்கதி உண்டாகும்

மார்கழி: அமாவாசை பெளர்ணமி -ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்

தை: அமாவாசை பெளர்ணமி -வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

மாசி: அமாவாசை பெளர்ணமி -துன்பம் அகலும்
 
பங்குனி :அமாவாசை பெளர்ணமி- தரும சிந்தனையை உண்டுபண்ணும்