Sunday, April 21, 2013

16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்


எட்டு வகையான லட்சுமிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் பதினாறு (16) வகை லட்சுமிகள் உண்டு. அந்த பதினாறு (16) வகையான லட்சுமிகளின் பெயர்களும், அவர்களின் சிறப்புக்களும்!

1. ஸ்ரீ தனலட்சுமி:-

நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்கவேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி:-

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண் டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப்பெறலாம்.

3. ஸ்ரீ தான்யலட்சுமி:-

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீ வரலட்சுமி:-

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ் வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீ சவுபாக்யலட்சுமி:-

ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கவேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீ சந்தானலட்சுமி:-

எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி:-

எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீ மகாலட்சுமி:-

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவவேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி:-

எந்த வேலையும் என்னால் முடியாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி:-

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி:-

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:-

எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி:- 

பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறு மையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீ கிருத்திலட்சுமி:-

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப் படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி:-

விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:-

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்துவிடாமல் இருக்க ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண் டும்.

Wednesday, April 17, 2013

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!




       மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.




 கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப் போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 

  பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள்தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!.  இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானியங்கள் 




அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். 
 





















அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பா ற்றப்படுவார்கள்!!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலா புறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக் கொண்டு நிற் கிறது!!! இது ஒரு தோராயமான கணக்குதான், இதை  உயரமான கோபுர ங்கள், இதைவிட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!அதெப்படி என்றுகேட்கிறவர்கள் படத்தைப்பார்க்கவும். இதை எல் லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.


Monday, April 15, 2013

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்




அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா!

அஷ்டலஷ்மிகளின் பெயர்கள்

கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி,  விஜயலட்சுமி, வீரலட்சுமி, மஹாலட்சுமி

அஷ்ட லஷ்மிகளின் சிறப்புக்கள்
  
1. கஜலட்சுமி:-
.
 



 நான்கு கரங்களுடனும், அதில் இருகைகள் தாமரை மலரை ஏந்த,  
ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பல வகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜ லட்சுமியின் திரு அம்சமாகும்.
.
2. ஆதிலட்சுமி:-
.
 





 ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபயகரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப் பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச்சுற்றிலும் அழகு வெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூல முதலான ஆதிலட்சுமியே ஆவாள்.
.
 
3. சந்தானலட்சுமி:-
.
 



 எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்ன லாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபயகரத் துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தானலட்சுமியின் திரு அம்சமாகும்.
.
 
4. தனலட்சுமி:-
.
 




 மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.
.
 
5. தானியலட்சுமி:-
.
 


 எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந் தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவைகளை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை , அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண் டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.
.
 
6. விஜயலட்சுமி:-
.
 



 உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளு ம், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண் டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜய லட்சுமியின் இயல்பு ஆகும்.
.
 
7. வீரலட்சுமி:-
.
 


 எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில்  ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வண ங்கி பேரருள் பெறுவோம்.
.
 
8. மஹாலட்சுமி:-
.
 




 தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல்நோக்கிய இருகரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம்

 
சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், சோமவார விரதம்!
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான் . அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்த வரை தானம் செய்ய வேண்டும். அதன்பின் பகல் முழுவதும் உண் ணாமல் விரதம் இருந்துமுன் இரவில் ஒருவேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டு ம். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதி யர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்ன தானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னி டத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார். 











கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 




ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப் படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகாவிஷ்ணுவை விட்டு, லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்ப வர்களுக்கு மறுபிறவி இல்லை. கார் த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். ஆலயத்தில் சுவாமிக்கு முன் பூஜைநேரத்தில் ஷாடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.
 
 
 
 
கார்த்திகைப்பொரி மிகவும் வெண்மை யாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். வெண் பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல்பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர் த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன் றுவான் என்பது தத்துவம்.
 
 
 
 
 
 எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றால நாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவ தும் உத்தமம். நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி அவனது பொற்பாதத்தில் சரணடை வோம்.

கௌரவர்களின் பெயர்கள்



மஹாபாரதத்தில் பாண்டவர்கள் எத்த‍னை பேர்? அவர்கள் பெயர்கள் என்ன‍ என்று கேட்டால், ஐந்து பேர், மற்றும் அவர்களது பெயர் கள் தருமன், பீமன், அர்ஜுனன், நகுளன் மற்றும் சகாதேவன் என்று சட்டென்று உங்களிடமிருந்து, பதில் வரும். இதே கௌரவர்கள் எத்த‍னை பேர் என்று கேட்டால், 100 என்று சொல்வீர்கள்.  ஆனால் அவர்களது பெயர்களை சொல்ல‍ச் சொல்லிக்கேட்டால், துரியோதனன், துச்சாதனன் என்ற இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லி பேந்த பேந்த விழிப்பீர்கள் அல்ல‍வா? இதோ அந்த கௌரவர்கள் பெயர்கள் துரி யோதனன்  உட்பட 100 சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும் கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்து பயனுறுங்கள்.
.

இதோ அந்த கௌரவ சகோதரர்களின் பெயர்கள்
.
1 துரியோதனன்
.
2 துச்சாதனன்
.
3 துஸ்ஸகன்
.
4 துஸ்ஸலன்
.
5 ஜலகந்தன்
.
6 சமன்
.
7 சகன்
.
8 விந்தன்
.
9 அனுவிந்தன்
.
10 துர்தர்ஷன்
.
11 சுபாகு
.
12 துஷ்ப்ரதர்ஷன்
.
13 துர்மர்ஷன்
.
14 துர்முகன்
.
15 துஷ்கர்ணன்
.
16 விகர்ணன்
.
17 சலன்
.
18 சத்வன்
.
19 சுலோசன்
.
20 சித்ரன்
.
21 உபசித்ரன்
.
22 சித்ராக்ஷன்
.
23 சாருசித்திரன்
.
24 சராசனன்
.
25 துர்மதன்
.
26 துர்விகாஷன்
.
27 விவில்சு
.
28 விகடிநந்தன்
.
29 ஊர்ணநாபன்
.
30 சுநாபன்
.
31 நந்தன்
.
32 உபநந்தன்
.
33 சித்ரபாணன்
.
34 சித்ரவர்மன்
.
35 சுவர்மன்
.
36 துர்விமோசன்
.
37 அயோபாகு
.
38 மகாபாகு
.
39 சித்ராங்கன்
.
40 சித்ரகுண்டலன்
.
41 பீமவேகன்
.
42 பீமபேலன்
.
43 வாலகி
.
44 பேலவர்தன்
.
45 உக்ராயுதன்
.
46 சுஷேணன்
.
47 குந்தாதரன்
.
48 மகோதரன்
.
49 சித்ராயுதன்
.
50 நிஷாங்கீ
.
51 பாசி
.
52 வ்ருந்தாரகன்
.
53 த்ரிதவர்மன்
.
54 த்ருதக்ஷத்ரன்
.
55 சோமகீர்த்தி
.
56 அந்துதரன்
.
57 த்ருதசந்தா
.
58 ஜராசந்தன்
.
59 சத்யசந்தன்
.
60 சதாசுவக்
.
61 உக்ரஸ்ரவஸ்
.
62 உக்ரசேனன்
.
63 சினானி
.
64 துஷ்பராஜா
.
65 அபராஜிதன்
.
66 குந்தசாயி
.
67 விசாலாக்ஷன்
.
68 துராதரன்
.
69 த்ருதஹஸ்தன்
..
70 ஸுஹஸ்தா
.
71 வாதவேகன்
.
72 சுவர்ச்சன்
.
73 ஆதித்யகேது
.
74 பஹ்வாசி
.
75 நாகதத்தன்
.
76 உக்ரசாயி
.
77 கவசி
.
78 க்ரதாணன்
.
79 குந்தை
.
80 பீமவிக்ரன்
.
81 தனுர்தரன்
.
82 வீரபாகு
.
83 அலோலுமன்
.
84 அபயா
.
85 த்ருதகர்மாவு
.
86 த்ருதரதாஸ்ரயன்
.
87 அநாத்ருஷ்யன்
.
88 குந்தபேடி
.
89 விராவை
.
90 சித்ரகுண்டலன்
.
91 ப்ரதமன்
.
92 அமப்ரமாதி
.
93 தீர்க்கரோமன்
.
94 சுவீர்யவான்
.
95 தீர்க்கபாகு
.
96 சுஜாதன் (சுஜாதன் என்பது பெண் பெயர். இப்பெயரை இந்த ஆணுக்கு வைக்க‍ப்பட்டுள்ள‍து.
.
97 காஞ்சனத்வாஜன்
.
98 குந்தாசி
.
99 விராஜஸ்
.
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்…)
.
101 துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்)

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும்!



27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப்பெயர்களும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து தெரிந்து கொள்ளுங்கள்

1. அசுவினி –    புரவி
 
2. பரணி   -  அடுப்பு     
 
3. கார்த்திகை –    ஆரல்
 
4. ரோகிணி –    சகடு     
 
5. மிருகசீரிடம் –    மான்றலை
 
மூன்றாம் பாதம் –    மிதுனம்
 
6. திருவாதிரை –    மூதிரை     
 
7. புனர்பூசம் –    கழை     
 
8. பூசம் –    காற்குளம்     
 
9. ஆயிலியம் –    கட்செவி     
 
10. மகம் –    கொடுநுகம்     
 
11. பூரம் –    கணை     
 
12. உத்தரம் –    உத்தரம்     
 
13. அத்தம் –    கை     
 
14. சித்திரை –    அறுவை     
 
15. சுவாதி –    விளக்கு     
 
16. விசாகம் –    முறம்     
 
17. அனுஷம் –    பனை     
 
18. கேட்டை  -   துளங்கொளி
 
19. மூலம் –    குருகு     
 
20. பூராடம் –    உடைகுளம்
 
21. உத்திராடம் –    கடைக் குளம்
 
22. திருவோணம் –    முக்கோல்
 
23. அவிட்டம் –    காக்கை     
 
24. சதயம் –    செக்கு     
 
25. பூரட்டாதி –    நாழி   
 
26. உத்திரட்டாதி –    முரசு     
 
27. ரேவதி –    தோணி

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?


கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி  விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.


மோதிர விரல் – கட்டை விரல்





 மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.