Wednesday, December 12, 2012

மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை

 
மலர்களில் மணம், நிறம் மட்டும்தான் உண்டு என்று பலர் நினைக்கின்றனர். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் பூக்கள்.

இதனால்தான், நம் முன்னோர்கள் இறைவனை பூஜிப்பதற்கும், பெண்களின் தலைக்கு சூடவும் மலர்களை பயன்படுத்தினர்.

மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.

இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

தற்பொழுது, ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப்பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.

அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தனர்.

அதனால் நோய்கள் குணமாவதையும் உணர்ந்தனர். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

மலர்களிலே அவள் மல்லிகை என்று கவிஞன் பாடிவைத்தான்.

அதன்படி மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம். மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Friday, December 7, 2012

புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...


சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.


சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.

ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.







































கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

Wednesday, December 5, 2012

விளக்குப் பூசை விளக்கம்

விளக்கு வழிபாடு


ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது. நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண்டும். உள்ளும் புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான இருள் அகலவே விளக்கு வழிபாடு!
காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடும் வீ டுகளில் லட்சுமி குடியிருக்கிறாள்.
ஒரு வீட்டின் பூசை அறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிவது சிறப்பு!

குத்து விளக்கின் ஜந்து முகங்கள்

பொதுவாக ஜந்து முகம் கொண்ட குத்து விளக்கையேற்றி வழிபடுவது வழக்கம். அந்த ஜந்து முகங்களும் பெண்களுக்குரிய ஜந்து குணங்களைக் குறிக்கின்றன.
1.  அன்பு 
2.  மனவுறுதி 
3.  நிதானம்
4.  சமயோசித புத்தி
5.  பொறுமை
ஆகியவற்றைக் குறிக்கின்றன.

திரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை

1. தாமரை போன்ற ஆசனம்- பிரம்மா
2. நெடிய தண்டு- விஷ்ணு
3. நெய்-அகல்- ருத்திரன்
4. திரியின் முனைகள்- மகேஸ்வரன்
5. நுனி- சதாசிவன்
6. நெய்- நாத தத்துவம்
7. திரி- விந்து தத்துவம்
8. சுடர்- திருமகள்
9. பிழம்பு- கலைமகள்
10. ஜோதி- பிரம்மம்

விளக்கும் எண்ணெயும் 

விளக்கு எரிக்கக் கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.பின்வருவன நன்மை தரும்.

1. நெய் – சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும்.

2. நல்லெண்ணெய் – எல்லாப் பீடைகளையும் விலக்கும்.

3. விளக்கெண்ணெய் – உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர், சுகம், தாம்பத்திய சுகம், ஆகியவற்றை விருத்தி செய்யும்.

முக்கூட்டு எண்ணெய்

வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். இது குலதெய்வத்திற்கு உகந்தது.
  
ஜங்கூட்டு எண்ணெய்

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து ஏற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம்(45 அல்லது 48) நாட்கள் பூசை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.

விடியற்காலை விளக்கு வழிபாடு

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

விளக்கும் முகங்களும்

* ஒருமுகம் ஏற்றி வழிபடுவது – மத்திய பலன்

* இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது- குடும்ப ஒற்றுமை பெருகும்

* மூன்று முகம் ஏற்றி வழிபடுவது -புத்திர சுகம் தரும்

* நான்கு முகம் ஏற்றி வழிபடுவது – பசு, பூமி இவற்றைத் தரும்

* ஜந்து முகம் ஏற்றி வழிபடுவது – செல்வத்தைப் பெருக்கும்

திசைகளும் பலன்களும்

1. கிழக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

2. மேற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்,       பங்காளிப்பகை இவை நீங்கும்.

3. வடக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

4. தெற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும் பாவம், அபசகுணம்.

விளக்குப் பூசைக்கு ஏற்ற நாட்கள்

அன்றாடம் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. விசேஷட நாட்களில் விளக்குப் பூசை செய்வது மேலும் பல நன்மைகள் தரும்.  விசேஷநாட்கள் பின்வருமாறு
1. வெள்ளிக் கிழமை 2. கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருகோணம் ஆகிய நாட்கள் 3. பெளர்ணமி 4. அமாவாசை 5. சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகள் 6. நவராத்திரி 7. சிவராத்திரி 8. ஆடிச் செவ்வாய் 9. ஆடி வெள்ளி 10. தைச் செவ்வாய் 11. தை வெள்ளி
 வாரத்தில் செவ்வாய், வெள்ளி நாட்களில் ஓம் சக்தி விளக்கேற்றி வைத்து, நம் பெண்கள் 108 மந்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்வதால் நன்மை பல கிடைக்கும்.

பூசைக்கு ஏற்ற விளக்குகள்

குத்து விளக்கு அல்லது பூசை விளக்குகட்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஜம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது. எக் காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூசைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

விளக்கேற்றும் நேரம்

* காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தைத் தரும்.

* மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுயை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.

* காலை விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து,  கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

* காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப்புறக் கதவைச் சாத்தி விட வேண்டும். கொல்லைபுறக் கதவு இல்லாதவர்கள் பின்பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

* விளக்கேற்றும் போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை

1. விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.

2. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.

3. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

4. விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

5. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

6. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.

7. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.

8. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றக் கொடுக்கக்கூடாது.


விளக்குப் பூசை செய்வோர்க்குச் சில குறிப்புகள்

1. இரு விளக்கை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்தே வணங்க வேண்டும்.

2. காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் பெருகும்.

 3. காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கி வந்தால் செல்வம் பெருகும், பாவம் விலகும்.

4. விளக்கைக் கிழக்குத் திசை நோக்கி வைப்பது சிறப்பு.

5. திரு விளக்குப் பூசையில் விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வகிட்டிலும் வைத்துவர அவர் தம் கணவர் நலமுடன் வாழ்வர்.

6. பூசை செய்யும்போது விளக்கைத் தலைவாழை மீது வைத்து பூசை செய்வது சிறப்பு.

7. விளக்கின் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.

8. மிகச் சிறியதாக அல்லது மிகப்பெரியதாக சுடர் எரியாமல் விளக்கின் அமைப்பிற்கும் அளவிற்கும் தக்கபடி எரிய வேண்டும்.

9. சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அதற்குக் காரணமான எண்ணெயையோ, திரியையோ உடனே மாற்ற வேண்டும்.

10. விளக்கில் குளம்போல எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

11. விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிரச் செய்வது பெரிய குற்றம்.

12. பூக்களால் அணைத்துக் குளிர வைக்கலாம். திரியை உள்ளே இழுத்து ஒளியை எண்ணெயில் மறையச் செய்யலாம்.

13. அதிகாலை எழுந்ததும் பூசை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

14. தீபம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

15. தீபம் வைத்தவுடன் உடனே முகம் கழுவுதல், கறி காய் நறுக்குதல், அரிசி களைதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
  
அடுப்பேற்ற....

சுமங்கலிப் பெண்கள் காலையில் குளித்துவிட்டு, காமாட்சி அம்மனை விளக்கேற்றி வழிபட்டு, அதிலிருந்து தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றிவர சகல நன்மைகள் ஏற்படும்.

அமாவாசை பெளர்ணமி விளக்குப் பூசை பலன்கள்


சித்திரை: அமாவாசை பெளர்ணமி- தானியம் உண்டாகும்.

வைகாசி: அமாவாசை பெளர்ணமி- செல்வம் உண்டாகும்.

ஆனி: அமாவாசை பெளர்ணமி -திருமணம் நடைபெறும்.

ஆடி: அமாவாசை பெளர்ணமி -ஆயுள் விருத்தி உண்டாகும்.

ஆவணி: அமாவாசை பெளர்ணமி -புத்திரப்பேறு உண்டாகும் 

புரட்டாதி: அமாவாசை பெளர்ணமி -பசுக்கள் விருத்தி உண்டாகும்

ஜப்பசி: அமாவாசை பெளர்ணமி -பசிப்பிணி நீங்கும்.

கார்த்திகை: அமாவாசை பெளர்ணமி- நற்கதி உண்டாகும்

மார்கழி: அமாவாசை பெளர்ணமி -ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்

தை: அமாவாசை பெளர்ணமி -வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

மாசி: அமாவாசை பெளர்ணமி -துன்பம் அகலும்
 
பங்குனி :அமாவாசை பெளர்ணமி- தரும சிந்தனையை உண்டுபண்ணும்

Tuesday, November 13, 2012

தீபம்




கார்த்த்கைத் தீபம் வரிசையாக சுடர் விட பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான் ,தீபத்திற்கு

எந்த எண்ணெய் விட்டால் என்ன பலன் என்பதை ஒரு அன்மீகப் புத்தகத்தில் முன்பு ப்டித்தேன் ,அதை உங்களுக்கும் சொல்கிறேன்

நெய் ,,,,,,சகலவிதமான செலவம் கணபதி மஹாலட்சுமிக்கு உகந்தது

நல்லெண்ணெய் ,,,,,,,எல்லா பீடைகளும் விலகும் …{நாரயணன்}

விளக்கெண்ணை புகழ் ப்ந்து சுகம் தாம்பத்திய சுகம்

கடலை எண்ணெய் ,,,,, ஏற்றுவதைத் தவிர்கவும்

தேங்காய் எண்ணெய் கண்பதிக்கு உகந்தது

இலுப்ப எண்ணெய் ருத்ராபதிக்கு உகந்தது

ஐந்து வித எண்ணெய் கலப்பு ,,நெய் வேப்பஎண்ணை விள்க்கெண்ணை ,தேங்காயெண்ணை

ஒரு மண்டலம் ஏற்ற தேவியின் அருள்

மூன்று வித எண்ணெய் ,,,,,வேப்பெண்ணை நெய் இலுப்பெண்ணை ,,,,,செலவம் குலதெய்வம்

திரி வகைகள்

பஞ்சு திரி ,,,மிகவும் நல்லது

தாமரைத் தண்டு பாவம் போக்கும் செல்வம் நிலைத்து நிற்கும்

வாழைத்தண்டு ,,,,,,,குழந்தைசெலவம் தெய்வக் குற்றம் நீங்கும்

வெள்ளை எருக்கன் பட்டை தீபம் ,,,, பெருத்த செலவம்

புது மஞ்சள் துண்டு திரி ,,,வியாதி குண்மாகும்

புது வெள்ளை வஸ்திரம் உத்தம பலன்

முகம் ஏற்றுவது

ஒருமுகம் ,,,,சுமார் பலன்

இரு முகம் குடும்ப ஒற்றுமை

மூன்று முகம் ,,,புத்திர சுகம்

நாலு முகம் பசு பூமி ,,,,பெருகும்

ஐந்து முகம் ஏற்ற செல்வவளம்  பெருகும் 
 
தோஷங்கள் நிவிருத்தி

ராகு தோஷம் 21 தீபம்

சர்ப்ப தோஷம் ,,48 தீபம்

கால சர்ப்ப தோஷம் 21 தீபம்

கள்த்திர தோஷம் 108 தீபம்

திருமணதோஷம் 21 தீபம்

புத்த்ர தோஷம் 51 தீபம்

நம்பினவர்களுக்கு நாராயணன் என்பார்கள் ,,,இதை செயவதில் குடும்பத்திற்கு நல்லது

என்பதால் செய்து பார்த்து பலன் பெறுக

Sunday, November 11, 2012

தீபாவளி விளக்கம்

தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு



தீபாவளிப் பண்டிகையின் சிறப்பினைப் பற்றி விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷ தர்மம், ஸ்மிருதி முக்தாபலம் முதலிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. நித்யான்னிகம் என்ற நூலிலும் தீபாவளி மகிமை கூறப்பட்டுள்ளது. கண்ணனிடம் நரகாசுரன் மரண சமயத்தில் வரம் கேட்டதால் ஏற்பட்டது தீபாவளித் திருநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். இந்த புண்ணிய தினத்தில்தான் திருமால் திருமகளைத் திருமணம் புரிந்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தீபாவளியை "லக்ஷ்மீ பரிணயதினம்' என்றே அழைப்பதுண்டு.

இப்படி விவாக கோலத்தில் இருந்த லக்ஷ்மி நாராயணனைத் தேவர்கள் ஒவ்வொரு வராக வந்து வணங்கினர். அப்போது யமதர்மனும் பணிந்து வணங்கினான். உடனே தேவி யமனிடம், "இன்றைய தினம் பண்டிகையை முறைப்படி கடைப்பிடிப்பவர்களது வீட்டில், என் உத்தரவின்றி நீ உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தாள். தர்மராஜனும் ஸ்ரீதேவியின் ஆணைப்படியே நடப்பதாக வாக்களித்தான். இதனால் மகிழ்ந்த அலைமகள் யமனிடம், "இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்து டன் சோபனாட்சதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட் டும்' என்று வரம் அளித்தாள். இதுவே யம தர்ப்பணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவிர தீபாவளியன்று பகவான் நரகாசுரனை வதம் செய்யச் சென்றபோது, அரக்கர்கள் லக்ஷ்மி தேவியைக் கவர்ந்து செல்ல முயற்சித்தனர். உடனே திருமகள் சூட்சும ரூபம் தரித்து எண்ணெயில் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் மறைந்துவிட்டாள்; நரகனை வதைத்துத் திரும்பிய பகவான் அரக்கர்களைக் கொன்று தேவியை மீட்டார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தான் அன்று தீபத்தையும் தலத்தையும் லக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம். தீப பூஜையும் வட இந்தியாவில் செய்யப்படு கிறது.

தீபாவளிப் பண்டிகையைக் கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகள் சாஸ்திரங்களில் கூறப்படுகின்றன. ஐப்பசி மாதம் தேய்பிறை யில், அமாவாசைக்கு முன் தினமான சதுர்த்தசியின் பின் இரவில், அதிகாலை மூன்று மணியளவில் துயில் எழ வேண்டும். தீபாவளிக்கு முன் தினம் இரவே வீடு முழுதும் மெழுகிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் சுத்த மான தண்ணீரை எடுத்துக் குடத்தில் நிரப்பி, சந்தன, குங்கும அட்சதைகளாலும் மலர் களாலும் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளை யும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து வெந்நீர் தயார் செய்யவேண்டும். வெந்நீரைத் தயாரித்த பிறகு எண்ணெய்க்குளியலுக்கு முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாயுருவிச் செடியினால் தங்களது தலையை மூன்று முறை சுற்றி, பிறரது காலடிபடாத இடத்தில் அந்தச் செடியினை எறிந்துவிட வேண்டும். இவ்விதம் செய்வதால் நமக்கு ஆத்ம ரக்ஷையும் ஐஸ்வர்யமும் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம் என்ன வென்றால், ஒரு சமயம் வேத புருஷனான பிரம்ம தேவனிடம் இருந்து அரக்கர்கள் வேதத்தைத் திருடிச் செல்ல எண்ணினார்கள். உடனே நான்முகன் "அபாமார்க்கம்' என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடிகளாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டார். ஹரி நாராயணன் தோன்றி அரக்கர்களைக் கபடமாக வதம் செய்தார். தீபாவளி புண்ணிய தினத்தில்தான் மேற்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேத புருஷனையே ரட்சித்த காரணத்தால்தான் நாயுருவிச் செடியை தீபாவளியன்று அதிகாலையில் நாமும் நமது ரட்சையாகப் பயன்படுத்துகிறோம்.

இவ்விதம் ரட்சை செய்துகொண்ட பிறகு, தீபம் ஏற்றி, தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணனுக்குப் பூமாலை சார்த்தி நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீர் கலசத்தை ஒரு பலகையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி கீழ்க்கண்ட சுலோகத் தைக் கூறவேண்டும்.

"
விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா

த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்

திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்

திவி புவ்யந்தரிக்ஷே தானிமே ஸந்து ஜாஹ்னவி'.

இதன் பொருளாவது, "ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதை யாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ள தாக வாயு பகவான் கூறியுள்ளார். அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்' என்பதாம்.

மேற்கண்டவாறு பிரார்த்தித்து நீராடிய பிறகு, புத்தாடைகள், ஆபரணங்கள் பூண்டு, லக்ஷ்மி நாராயணனை மலர் களால் அர்ச்சிக்க வேண்டும். பலவகை இனிப்புகள், தின்பண்டங்கள், பழங்கள், தாம்பூலம் முதலியவற்றை நிவேதனம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பகவானையும் பெரியோர்களையும் வணங்கி, வாணவேடிக்கை களாலும் தீபங்களாலும் எங்கும் ஒளிரச் செய்ய வேண்டும். குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும். 

தீபாவளியை வடஇந்தியாவில் மகாபலி தீபம், நரக சதுர்த்தசி, லக்ஷ்மி குபேர பூஜை என்று மூன்று தினங்கள் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாக தர்ம சாஸ்திரத்தில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு மேலும் தைல ஸ்னானம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தைல ஸ்னானத்தை "அப்யங்க ஸ்னானம்' என்றும்; "மலாபகர்ஷ ணம்' என்றும் அழைப்பதுண்டு. ஸ்மிருதிக ளில் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்வது மனதிற்கு வருத்தத்தையும், திங்கட் கிழமை தேக காந்தியையும், செவ்வாய்க்கிழமை மரணத்தையும், புதன் கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக் கிழமை வறுமையையும், சனிக்கிழமை விரும்பி யவற்றில் லாபத்தையும் அளிக்கும் என்று கூறப் படுகிறது. ஆனால் பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியுமே உகந்ததாகக் கருதப்படுகின்றன.

தைல ஸ்னானத்துக்கு ஷஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தசி, அஷ்டமி, பிரதமை, பௌர்ணமி, அமாவாசை முதலிய திதிகளும்; உத்திரம், கேட்டை, திருவோணம், திருவா திரை முதலிய நட்சத்திரங்களும் உகந்தவை அல்ல என்று தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வி தம் விலக்கப்பட்ட திதி, வாரம், நட்சத்திரங்க ளில் எண்ணெய் நீராட நேரிட்டால் சிறிது நெய்யைக் கலந்து தேய்த்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்ய நேரிட் டால் எண்ணெய்யுடன் புஷ்பத்தையும், வெள்ளிக்கிழமை செய்தால் கோமூத்திரத்தை யும், செவ்வாய்க்கிழமை சிறிது மண்ணையும் கலந்த நீராட வேண்டும் என்று பரிகாரமும் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை எண் ணெயுடன் அருகம்புல்லைச் சேர்த்து நீராடுவது நலம் தரும்.

ஆனால் பொதுவாக சதுர்த்தசியில் எண்ணெய் நீராடுவது கூடாது என்பது தீபாவளிக்குப் பொருந்தாது. ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் அமாவாசைக்கு முதல் தினம் விடியற்காலையில் நல்லெண் ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் நீராடுவது கட்டாயமாகச் செய்ய வேண்டிய கடமை யாகக் கூறப்படுகிறது. இவ்விதம் செய்யா விட்டால் நரகத்தை அளிக்க வல்ல பாபம் வந்து சேரும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

"
யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநா நிசி

தஸ்யாமப் யஞ்ஜனம் கார்யம் நரைர் நரக் பீருபி:'

என்னும் சுலோகம் இதனை விளக்குகிறது.

தவிர இந்த நரக சதுர்த்தசியன்று உஷத் காலத்தில் சூரியன், சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புனிதமான தினம் என்றும்; இந்த நன்னாளில் எண்ணெய் நீராடல், லக்ஷ்மி பூஜை, புத்தாடை உடுத்தல் முதலிய சுபகாரியங்களை அவசியம் செய்யும் படியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை விஷ்ணு புராணம்,

"
ஸ்வாதி ஸ்திதே ரவாவிந்துர் யதிஸ்துôதி கதோ பவேத்

பஞ்சத்வ குதகஸ்தாயீ க்ருதாப்யங்க விதிர் நர:'

என்று கூறுகிறது.

தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

"நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே

தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா'

என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

மேலும் தீபாவளியில் எண்ணெய்யில் லக்ஷ்மி தேவியும், நீரில் கங்காதேவியும் வசிக்கி றார்கள் என்பதை,

"
தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்'

என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்த கைய தீபாவளி தினத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணனை வழிபட்டு பண்டிகையை மங்களகரமாக அனுஷ்டித்தால் எல்லா நலமும் பெறுவோம் என்பது திண்ணம்.

"
கங்காதீர்த்தே மலின மனஸ:

பாதகம் க்ஷாலயந்தி'

என்றபடி, சிவதியானத்தில் எப்போதும் ஈடுபட்ட மனத்தினளும், தாயுமானவளுமான கங்காதேவியானவள், இத்தீபாவளித் திரு நாளில் நம் அனைவரது இல்லங்களிலும் எழுந்தருளி நமது மூவினைகளையும் அழித் துப் பன்னலங்களையும் அருளப் பிரார்த்திப் போமாக.

"
கங்காதேவி நமஸ்துப்யம் சிவ சூட விராசிதே

சரண்யே ஸர்வ பூதானாம் த்ராஹிமாம் சரணாகதம்'.