மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையன வாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார் கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.
பாதங்கள் சிவந்த நிறமுடையன வாகவும் தசைவளம் மிக்கனவாகவும், மென்மையானவையாக வும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெது வெதுப்பானவை யாகவும், அமையப்பெற்ற பெண் கள் பெரும்பேறுகளைப் பெற்று த் திகழ்வார்கள். ·
பாதங்கள் வெண்மையாகவோ,தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகாபாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும்,மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும், திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வதரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வபக்தியும்மிக்க இவர்கள், கணவரின் பணி விடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண் டவர்களாகவும் இருப்பார்கள். ·
பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதா கும். வெண்மை நிறத்துடனும், கோ ணலாகவும், வறண்டும் காணப்படு வது வறுமையைக்குறிக்கும். வெண் மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும். ·
பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையதாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும் நல்லோரை பழிப்பவர்களாகவும் தெய்வநம்பி க்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்மசுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ·
மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகலவிதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவியோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்துவார்கள்.
பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காமவேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக்கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப்போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக்கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்க ளாகவும், தன்னம்பிக்கையற்ற வெகு ளிகளாகவும் இருப்பார்கள்.
பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர் களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங் கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச்சொற்க ளையும் ஏற்க வேண்டியவர்களா வார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப்போக்கும் கொண்டவர்களாக இருப்பார்கள். ·
பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்தி ற்கும், சுய தேவைப் பூர்த்திக்காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள். ·
உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளி வாகவும் மேல்நோக்கிச் செல்வனவா கவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனை யடை வார்கள்.
No comments:
Post a Comment