ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!
சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள்
மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள்
கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில்
இருக்கின்றது.
![[childghost.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihIwO9FgXBsKH86Ag5v1K11o5gBXazgC32eG8ekckCzFzj6rNxCC8a1mKvtF_nTKa3nDzgaqP4zOwp4riD8D8Zk82kfvdpCbeb__WV2xTbZJue2BZK6ZgcLf7VHPcPZhJqaOSFFk3IeyG-/s1600/childghost.jpg)
திடீர்
விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள்
முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க
வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு
என்றும் பெயர்.
நம்
சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக
பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே
சுற்றும்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும்
செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து
தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த
ஆவிகளுக்கு விடுதலை!
துர்மரணம்
அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை
வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும்
பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.
துர்மரணமடைந்தது
வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத்
துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத்
துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில்
மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள்
தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன்
எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி
லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல்
இராது.
நயம்சாம்பிராணி,
வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை
மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை
நன்கு கழுவ வேண்டும்.
ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில
வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில்
தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை,
குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு
பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.
ஐயோ...@
ReplyDelete