Wednesday, October 31, 2012

சீவன் செல்லும் பாதையில் பரதவித்தல் (கருட புராணம்)

சூதபுராணிகர்  நைமிசாரணியவாசிகளை நோக்கி, திருமாலின் திருவடி மறவாத பக்தர்களே என்று கூறலானார்.
கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறியதாவது:

யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் சீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்ப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே ? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே! என்று அலறித் துடிப்பான்.
கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும் புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச்  சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
                                           அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு "அவ்யாமியம்" என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு  யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். பிறகு "குருரபுரம்" என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு அப்பால் நடந்து "கிரௌஞ்சம்" என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான். அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து,
ஜீவனே!  எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய  வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும் என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.
                                                            பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன்  மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில  பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த சீவனைப் பார்த்து, அட மூடனே!   நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.
                                     பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட சீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும்.  ஐயகோ!    பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே!
பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா!  சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா!  "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்! என்று துக்கப்படுவான்.
                    
                         அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே!   பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது. அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேக்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு  எதையுமே செய்ய இயலாது. மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

                           கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான். இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவபதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து "துக்கதம்" ஊரை அடைந்து உண்பான். விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில் யமகிங்கர்களே!   என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்  என்று அழுவான்.
                    
                                           அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி  முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும் என்று அறைவார்கள். ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன் என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான். யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும்  ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு நிறவனர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.

No comments:

Post a Comment