Saturday, October 13, 2012

நவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறுகின்றாள் . இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
 1

  முதலாம் படி :-

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்களின் பொம்மை கள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-
 

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.                                

4. நாலாம்படி :-

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு  போன்றவற்றின் பொம் மைகள்.

5. ஐந்தாம்படி :-

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி :-

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

VII Step

7. ஏழாம்படி :-

மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.

8. எட்டாம்படி :-
 

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக்கம்.
 

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக் காரி. நீதி யைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜ ராஜே ஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
 

2. இரண்டாம் நாள் :-

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வரா ஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியி ருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலை யில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண் டவள். விருத் திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபா லனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.

4. நான்காம் நாள் :-

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள் :-

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பா ம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண் டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட் சம் கொடுத்த அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
 

6. ஆறாம் நாள் :-

இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வா கனமும் சேவல் கொடியும் உடைய வள். தேவசேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள் :-

ஏழாம்நாள் அன்னையை மகாலட் சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கல யம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள் :-

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தரு பவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்கார த்தில் காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.


9. ஒன்பதாம் நாள் :-

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அரு ளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.சுண்டல் 

இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.

மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் “படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.

“தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்” என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

நவராத்திரி வரலாறு
 
 

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நவராத்திரி விரதம் உருவானதற்கான புராணக் கதை.

சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.

தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.

அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை.
பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.

இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள்.

சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான்.

இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்

இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டியே நடைபெறுகின்றன.

மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.


                                 சிவகதி வேண்டி சிவராத்திரி விரதம்

                           செல்வச் சிறப்போடு வாழ நவராத்திரி விரதம்

                                                              சுபம்

No comments:

Post a Comment