Sunday, October 21, 2012

மதுரை வீரன்



மதுரை வீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.




வரலாறு

மதுரை வீரன் வடக்கில் உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . சக்கிலியர் இனத்தவர்கள் இவரை காட்டில் கண்டெடுத்து வளர்கின்றனர் . திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் திருடுவதை தொழிலாகக் கொண்டு இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் .

No comments:

Post a Comment