Saturday, October 27, 2012

திருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?



திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது?

என்ன என்ன செய்ய வேண்டும்:-

* முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.

* வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.

* சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறுமருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.

* ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.

* புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.

* கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளரக் காரணமாகிவிடும்.

* புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.

* அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.

* பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.

* ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

* புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.

* விட்டுக்கொடுக்கும் மனதுயாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.

2 comments:

  1. இவை அனைத்தும் முக்கியமான குறிப்புகள்
    பெண்கள் அனைவறும் படிக்கவேண்டிய குறிப்புகள்.
    பதிவிட்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. manamagalukku nalla advice Ethan pinpatrinal sirappaga vazhvargal. vazhthukkal

    ReplyDelete